welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, July 16, 2011

    சுமை

 





 












ஏர் பிடித்து உழுகின்ற
உன்னருகில்
ஏன் அந்த இளமொட்டு?
பசி!
பட்டினி!
கடன்!
இல்லாமை!
உன் தலையிலுள்ள சுமைகளை
அவள் தலையில் இறக்கி வைக்கவா?
ஏர் பிடித்து உழுதவன் வாழ்வில்
ஏற்றம் கண்டதுமில்லை!
இந்த உலகம்
வாழ விட்டதுமில்லை!
வேண்டாம்...
இந்த விபரீத விளையாட்டு!

                                                               கவிஞர்
                                                         கவி  தென்றல்
                                                    ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
      


  தொ(ல்)லைக்கட்சித் தொடர்
                          



                               முப்பது நிமிட நாடகம்!
                               அதில்...
                               இருபது நிமிடம்
                              விளம்பரங்கள்!


                                         கவிஞர்
                                    கவி  தென்றல்
                                ஆவடி, தமிழ் நாடு.





 இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

 

Friday, July 15, 2011

  கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்

 

  










சிறியவருக்கும் பெரியவருக்கும்
சிறப்புதரும் போட்டியிது !
சிரத்தையுடன் செயல்பட்டால்
பரிசு தரும் போட்டியிது !

கரண்டிக்கும் வாயிக்கும்
கவ்வி வரும் உங்களுக்கும்
காணுகின்ற எங்களுக்கும்
களிப்பு தரும் போட்டியிது !

                                                           கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                  ஆவடி ,தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Sunday, July 10, 2011

   வாலிப ஞாயிறு

 

 














வாலிப சகோதரரே வாருங்கள் !
வாலிப சகோதரியே வாருங்கள் !
அகிலமும் படைத்த தேவனை
அனைவரும் போற்றுவோம் வாருங்கள் !

பொய் சொல்லக் கூடாது நீயும் -ஒரு
பொல்லாங்கும்  நினையாதே நீயும் !
அன்புடனே நடந்திடுவாய் நாளும் .
அனைவரையும் ஆட்கொள்வாய் நீயும் !

வாலிப நாளான இன்று -நல்
வாழ்வினை தொடங்கிடுவாய் நன்று !
வேதாகமத்தை கைக் கொண்டு நீயும்
தேவனை ஆட்கொள்வாய் இன்று !

முழங்கால் படியிட்டு நீயும்
முவ்வேளை ஜெபம் செய்வாய் நாளும் !
முவ்வுலக தேவனை நீயும்
முற்றிலும் அறிந்திடுவாய் நாளும் !

                                                             

                                                                      கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                           ஆவடி , தமிழ்நாடு .







இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
  நல்ல கிறிஸ்து

 

 












பரிசுத்த தேவனை பாடிடுவோம் !
பரம பிதாவை பாடிடுவோம் !
உன்னதங்களில் உயர்ந்தவரை
ஒர்குர லெழுப்பி பாடிடுவோம் !

குருடரின் கண்களை திறந்தவராம் -உடல்
குறைகளை யெல்லாம் களைந்தவராம் !
பாவ மன்னிப்புக்கு பிறந்தவராம் -நம்
பாவத்திற்காக உயிர் துறந்தவராம் !

வேதப் பாடங்களை படித்திடுவோம் -நாம்
தேவ வாக்கின்படி நடந்திடுவோம் !
பகைவனை நண்பனாய் நினைத்திடுவோம் -உலக
பாவம் போக்க வழி செய்திடுவோம் !

நல்ல கிறிஸ்துவரென பெயரெடுப்போம்!
நாம் கிறிஸ்து வருகைக்கு காத்திருப்போம் !
வருகின்ற ஆண்டவரை வரவேற்போம் -அவரை
வான மண்டலத்தில் துதித்திருபோம் !

                                                                                              கவிஞர்
                   
                                           கவி  தென்றல்
                                                                                    ஆவடி , தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
   சிறந்த மேய்ப்பர்

 

 














தாயை இழந்த சேயைப் போல
     தவித்து நின்றேனே !
தயவு நிறைந்த ஆண்டவர் என்னை
     தாங்கிக் கொண்டாரே !

பாவம் நிறைந்த எனது உள்ளம்
     பரிசுத்த மானதே !
தாபம் கொண்ட என்னை அவரும்
     தழுவிக் கொண்டாரே !

ஒளியிழந்த எந்தன் வாழ்வில்
     ஒளியாய் வந்தாரே !
வலுவிழந்த எனது ஜீவனுக்கு
     வாழ் வளித்தாரே !

சிதறிப் போன என்னைத் தேடி
     மந்தையில் சேர்த்தாரே !
சிறந்த மேய்ப்பர் இயேசுவே யென
     சிந்தைக் குளிர்ந்தேனே !

                                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                 ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!





 உன்னதங்களின் உயர்ந்தவர்

 

 












வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை !
கேளுங்கள் தேவனை தேடுங்கள்
தேவனின் அருள் பெற !

ஓடுங்கள், துரிதமாய் ஒளியுங்கள்
உலகப் பாவத்தைக் கண்டு !
ஆடுங்கள் நன்றாய் பாடுங்கள்
ஆண்டவரின் அருளைக் கண்டு !

துக்கப்படுங்கள் , வெட்கப்படுங்கள்
துன்மார்க்கர் செயலைக் கண்டு !
பக்கம் வாருங்கள் பரவசமாகுங்கள்
பரமப் பிதாவைக் கண்டு !

நல்லதை செய்யுங்கள் கெட்டதை தள்ளுங்கள்
உள்ளதை உண்ணுங்கள் இருப்பதை உடுத்துங்கள்
மேய்ப்பரை நாடுங்கள் மேன்மையை காணுங்கள்
உன்னதங்களின் உயர்ந்தவரை உள்ளளவும் போற்றுங்கள் !
             
                                                                                       கவிஞர்
                                                                         
  கவி  தென்றல்
                                                                              ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Sunday, July 3, 2011

     பணமிருந்தால்...

                     


 

                         





                           படிக்காமல்
                           பட்டம்
                          வேண்டுமா?
                       

                          பட்டமில்லாமல்
                          பதவி
                         வேண்டுமா?
                      

                         தேர்தலில் நிற்காமல்
                        ஜெயிக்க
                        வேண்டுமா?

                         தேர்தலில் நின்றால்
                         ஓட்டு
                         வேண்டுமா?
                      

                         சாதி சண்டையை
                         சமரசம் செய்ய
                         வேண்டுமா?
                     

                         புதுக்கட்சி
                        தொடங்க
                        வேண்டுமா?

                        அடிமட்ட தொண்டன்
                        தலைவன் ஆக
                       வேண்டுமா?
                    

                        இந்த நாட்டை நீ
                        ஆள
                        வேண்டுமா?
                      

                        நாட்டின் அமைதியை
                        கெடுக்க
                        வேண்டுமா?

                         தீவிர வாதத்தை
                        வளர்க்க
                        வேண்டுமா?
                  

                         அடுத்த வருக்கு
                         அநீதி செய்ய
                         வேண்டுமா?
                   

                          நம்பிய வரை
                         கெடுக்க
                         வேண்டுமா?

                         நல்லவனை கெட்டவனாக
                         மாற்ற
                         வேண்டுமா?
                    

                         அரசாங்க சொத்தை
                         அபகரிக்க
                         வேண்டுமா?
                    

                         சடிதியில் சாமி தரிசனம்
                         காண
                         வேண்டுமா?

                         பினாமி பெயரில் சொத்து
                         வாங்க
                         வேண்டுமா?
                  

                          கள்ளப் பணத்தை
                          புழக்கத்தில் விட
                          வேண்டுமா?
              

                          வருமான வரியை
                          ஏய்க்க
                         வேண்டுமா?

                         குற்றமற்றவனை
                          தண்டிக்க
                          வேண்டுமா?
              

                           குற்றவாளியை
                           விடுதலை செய்ய
                          வேண்டுமா?
             

                           இந்த கவிதை
                           பத்திரிக்கையில் வர
                          வேண்டுமா?

                          மனமிருந்தால்
                          மார்க்கமுண்டு
                         அது பொய்!
                 

                         பணமிருந்தால்
                         பாதையுண்டு
                         இதுதான் மெய்!

                                                                  கவிஞர்
                                                              கவி  தென்றல்
                                                            ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Saturday, July 2, 2011

               மலை














சாலைகள் அமைவதும் உன்னாலே -நல்
கோயில்கள் அமைவதும் உன்னாலே !
கல் தச்சர் கை வண்ணத்தில்
நல் சிலைகள் உருவாகுவதும் உன்னாலே !

அம்மி, உரல், ஆட்டுக்கல்
அனைத்தும் ஆவதும் உன்னாலே !
சித்த வைத்தியம் பிறந்ததும் உன்னாலே !
சித்த வைத்தியர் வாழ்ந்ததும் உன்னாலே !

முற்றும் துறந்த முனிவர்கள்
முற்றுப் பெற்றதும் உன் மேலே !
நதிகள் பிறப்பதும் உன் மேலே -நல்
மூலிகை வளர்வதும் உன் மேலே !

வீட்டைக் காக்கும் மனிதர் போல் -நம்
நாட்டைக் காப்பதும் நீதானே !
உலக சாதனைக் கண்டிட -வீரர்களுக்கு
உறுதுணையாய் இருப்பதும் நீதானே !

                                                                              கவிஞர்
                                                                 கவி  தென்றல்
                                                                    ஆவடி , தமிழ்நாடு .





இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, June 10, 2011


      தென்றல்

காண இயலாத காற்றே !
கருணையில் இயற்கையின் ஊற்றே !
உயிரினங்கள் உயிர் வாழ
உறுதுணையாய் இருப்பதும் நீயே !

மேகங்களை குளிர செய்து
மழையைப் பெய்ய வைப்பதும் நீயே !
சாதி மத பேதமின்றி
சகலத்தையும் அரவணைப்பதும் நீயே !

கூலி வேலை செய்வோரின் குழந்தைகளை
தூலியில் தூங்க செய்வதும் நீயே !
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விசிறியாய் சுழல்வதும் நீயே !

பஞ்ச பூதங்களில் உன்னைத்தான்
தஞ்சம் கொள்கிறோம் நாங்கள் !
தென்றலை மிஞ்ச கூடியவர்  யாருண்டு ?
தெரிந்தால் கூறுங்கள் நீங்கள் !

                                                                             கவிஞர்
                                                               கவி  தென்றல்
                                                                   ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Thursday, June 9, 2011

    சீசாவில் தண்ணீர் நிரப்பும் போட்டி

பிளாஸ்டிக் வாளியில் தண்ணீருண்டு !
தண்ணீரை மொல்ல தளிர் கைகளுண்டு !
மின்னல் வேகத்தில் தண்ணீர் மொண்டு
கண்ணாடி சீசாவில் நிரப்ப குறைவான நேரமுண்டு !

வேகமாக ஊற்றினால் தண்ணீர்
வெளியே சிதறிவிடும் !
மெதுவாக நிரப்பினால் பரிசு
வேறு ஆளுக்கு மாறிவிடும் !

புரிந்து கொண்ட நீங்களும்
புதுமையாக செயல்பட்டால்
சிறந்த பரிசு உங்களுக்கு
விரைந்து வந்து சேர்ந்துவிடும் !

                                                       கவிஞர்
                                                  கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .









இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Monday, June 6, 2011





 












பந்தயத்தில் கலக்க வா...
பரிசுகளை வெல்லவா...


சின்ன சின்ன மழலைகள்
வண்ண வண்ண உடைகளில்
எண்ண மெல்லாம் நிறைவேற
எழுந்து ஒன்றாய் வாருங்கள்!

ஓடி யாடி விளையாடும்
உங்கள் போன்ற பிள்ளைகள்
ஓட்டப் பந்தயத்தில் ஓடினால்
உயர்ந்த பரிசை வெல்லலாம்!

தத்தித் தத்தி ஓடிவரும்
தவளைப் போல ஓடவே
சிரத்தைக் கொண்டு நீங்களும்
பரிசுப் பெற வாருங்கள்!

பாய்ந்து பாய்ந்து குதித்து
பன்னை வாயால் கடித்து
போட்டியில் நீ வென்றிட
பொலிவுடனே ஓடி வா!

ஓவியப் போட்டியில் நீயும்
ஒய்யார மாய் கலக்கலாம்
ஓகோ வென பாராட்டும்
ஓவியத்தையும் நீ வரையலாம்!

பாடி ஆடி ஓடி வா!
போட்டி இடத்துக்கு பறந்துவா!
பந்தயத்தில் கலக்க வா!
பரிசுகளை வெல்ல வா!


                                                                 கவிஞர்
                                                    கவி  தென்றல்
                                                       ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
        நினைவு

நினைவே என்முன் நில்லாதே!-பெண்ணே
நீயும் என்முன் நில்லாதே !
எனது உள்ளம் இங்கில்லை -நீ
ஏன் என என்னை கேளாதே !

அடர்ந்த சோலையின் நடுவினிலே
அவளும் நானும் சென்று வந்தோம் !
இனிமை நிறைந்த அவ்வேளையிலே
இன்பத்தை இருவரும் கண்டு வந்தோம் !

உள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்
ஒருத்திக்கு மட்டும் இடமுண்டு !
கள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு
கள்வரிடம் மட்டும் இடமுண்டு !

                                                                                கவிஞர்
                                                                  கவி  தென்றல்
                                                                      ஆவடி ,தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Thursday, June 2, 2011

 பணியிலே கவனக் குறைவு
முடிவிலே அங்கக் குறைவு



 










கையுறை, காலுறை,  மேலுறை - சாதனங்களை
கைக் கொண்டால் உனக்கில்லை உடற்குறை!
செய்முறை செயல்முறை பணிமுறை - தெரிந்து
செய்தால் வாழ்வில் வரும் நிறை!

தொழிலாளர்க்கு பல கவலை உண்டு - அது
தொழிற்சாலைக்குள் வரலாமா?
பிழைக்கும் இடத்தில் நமை மறந்தால்
இழக்க நேருமே நம் உயிரை!

பழுது சாதனங்களை கைக் கொண்டால் - நீ
பாழும் கிணற்றில் விழுந்திடுவாய்!
அழுது புரண்டு அழுதாலும் - உன்
இழந்த உறுப்பு இணைந்திடுமா?
உரிய சாதனம் கைக் கொண்டே - நம்
அரிய உடலைக் காத்திடுவோம்!


                                                                          கவிஞர்
                                                            கவி  தென்றல்
                                                                 ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!


   பாரம்

 

 












வயதான பெற்றோரை ,
பாரமாக எண்ணி
முதியோர் இல்லத்தில்
தள்ளிவிட வந்த
இளைஞனே...
இப்போதே உன் பெயரை
முன்பதிவு செய்துக் கொள் !
நாளை ...
உன் மகன்
உன்னை பாரமாக நினைக்கும் போது
உதவியாக இருக்கும் !

                                                   கவிஞர்
                                கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Tuesday, May 31, 2011

  மாறு வேட போட்டி


மாறு வேட போட்டியென்றால்
மழலைகளுக்கு கொண்டாட்டம் !
மாறுவேடம் போட்டது யார் ?
நமக்கெல்லாம் திண்டாட்டம் !
வேடம் கலைந்து நின்றாலோ
எல்லோருக்கும் களிப்பாட்டம் !
பங்கு ஏற்கும் குழந்தைகளை
பார்வையாளர்கள்! பாராட்டட்டும் !
பரிசு பெறும் குழந்தைகளுக்கு
பெற்றோர் பாசத்தை பொழியட்டும் !

                                                               கவிஞர்
                                                   கவி  தென்றல்
                                                       ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, May 20, 2011


   கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்
 
 
 











ஆளுக்கொரு கரண்டியிலே
அழகானதொரு எலுமிச்சை !
ஆர்வம் கொண்ட உங்களுக்கு
நாங்கள் தரும் பரீட்சை !

கரண்டியை வாயில் கவ்விக் கொண்டு
கருத்தாய் நீங்கள் நடக்கலாம் !
பழம் நழுவி கீழே விழுந்தால்
பரிசு பெறாமல் போகலாம் !

வேகமாக அடியெடுத்து
விவேகமாய் செல்லலாம் !
வெற்றி இலக்கை சென்றடைந்தால்
பரிசுப் பெற்று செல்லலாம் !

                                                         கவிஞர்
                                  கவி  தென்றல்
                                              ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
  காலம் கடந்த யோசனை

தலை முடியில் சாயம் (டை )அடித்திருந்தால் ...
முதுமையை காட்டும்
வெள்ளி முடிகளை மறைத்திருக்கலாம் !
மேக்கப் போட்டிருந்தால் ...
இருண்ட உன் முகத்தை
இளமையாக காட்டியிருக்கலாம் !
நவீன உடைகளை அணிந்திருந்தால் ...
கவர்ச்சியாக இருந்திருக்கலாம் !
வரன் கேட்டு வந்தவர்களில்
ஒருவன்
வரதட்சணையின்றி உன்னை
வாரிக் கொண்டு
போயிருப்பானே ...
காலம் கடந்த யோசனை !
கண்ணீர் சிந்தினாள்
முப்பது வயது கன்னிப் பெண் .

                                                   கவிஞர்
                               கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Saturday, May 14, 2011

காதலர் தினம்

காதலர் தினத்தன்று
கனிந்தது நம் காதல்
நாளை...
உனக்கும் முறை மாமனுக்கும்
திருமணம்.
ஆனால்...
எனக்கு?

                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                ஆவடி, தமிழ் நாடு. 


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!


Wednesday, May 4, 2011

 தாலாட்டு  

  
 













சிப்பியிலிருந்து பிறந்த நல்முத்தே -நீ
சிறப்புடன் வாழவேண்டும் என் சொத்தே !
பாலுட்டி வளர்த்திடுவேன் நான் அன்போடு !
சீராட்டி வளரவேண்டும் நல்பண்போடு !

மழலை மொழி பேசி மயக்கிடுவாய் -எங்களை 

மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திடுவாய் !
பள்ளியில் நீயும் படித்திடுவாய் -படிப்பில்
பள்ளியில் முதல்வனாய்  வந்திடுவாய் !

தேனீக்கள் போலவே உழைத்திடுவாய் -நீயும்
தேனாய் எல்லோருக்கும் இனித்திடுவாய் !
குடும்ப பாரம் உனக்கில்லை -எந்த
குறையும் உனக்கு இங்கில்லை !

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் -உன்னை
வளர்ப்பதே எங்கள் பொது எண்ணம் !
எதிர்காலத்தில் இந்நாட்டின் மன்னன்
நிச்சயம் நீ ஆவாய் இது திண்ணம் !

                                                                             கவிஞர்
                                                                      கவி  தென்றல்
                                                                  ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

   இசை நாற்காலி போட்டி

 
 












இசையின் சத்தம் கேட்கும் போது
இணந்து ஒன்றாய் ஓடுங்கள் !
இசையின் சத்தம் நிற்கும் போது
இருக்கை ஒன்றை தேடுங்கள் !

அமர்ந்தவருக்கோ அதிஷ்டமுண்டு
அடுத்த முறை ஓடலாம் !
நின்றவருக்கோ வாய்ப்பில்லை
நிம்மதியாய் வெளியேறலாம் !

                                                         கவிஞர்
                                                 கவி  தென்றல்
                                             ஆவடி , தமிழ்நாடு . 












இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Tuesday, April 26, 2011

மனிதனின் வாழ்க்கை




 இருபது வயதில் ...
     அழகிய மனைவி !
கைநிறைய சம்பளம் !
முப்பது வயதில் ...
     இரு குழந்தைகள் !
நாற்பது வயதில் ...
     நல்ல தொரு வீடு !
ஐம்பது வயதில் ...
     பிள்ளைகள் திருமணம் !
அறுபது வயதில் ...
எனக்கும் ,
என் மனைவிக்கும்
துணை
அனாதை விடுதி !

                                                

                                                 கவிஞர்

                        கவி  தென்றல்
                                      ஆவடி , தமிழ்நாடு

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!.

Friday, April 15, 2011

தலைவனின் ஆணை!
 

 


















தோழா...

சிங்கமென புறப்படு!
வங்க கடல்
அலையென வா!
வீட்டை மற!
நாட்டை நினை!
நாளை நமதே!
சீற்றம் கொள்!
வெயில், மழை பாராதே!
வெற்றிக்காக உழை!
உற்சாகம் கொள்!
உதிரம் சிந்து!


உன் உயிர் ஈந்து
என் உயிர் காக்க
விரைந்து வா!
வெற்றிக் கனியை பறித்து
பாசமிகு தலைவனுக்கு
பரிசளிக்க...


குளிர்சாதன அறையிலிருந்து
குரல் கொடுத்தார்
கட்சித் தலைவர்!

                                                       கவிஞர்
                                                கவி  தென்றல்
                                            ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

விண்ணில்  உன்  ஜீவன்


 












உலகைப் படைத்த நமது ஆண்டவர்
     உன்னை அழைக்கிறார் !
உரிமையோடு அவரிடத்தில்
     ஒன்று சேர்ந்திடு !

அன்பு  கொண்ட ஆண்டவரிடத்தில் உன்
     தேவையை  சொல்லி விடு !
புண்பட்ட உந்தன் வாழ்வை
     பொன் போல் மாற்றுவார் !

எல்லையில்லா தொல்லைக் கொண்ட
     உன் ஆத்துமாவை
எண்ணிலடங்கா அற்புதம் செய்து
     பரிசுத்தம் ஆக்குவார் !

மண்ணில் முடங்கும் உடலைக் குறித்து
     கவலைக் கொள்ளாதே !
விண்ணில் உலாவும் உனது ஜீவன்
     உன்னதம் அன்றோ !

                    
                     
                                                            கவிஞர்
                                                கவி  தென்றல்
                                                   ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, April 8, 2011

ஈடில்லாப் புகழை இது பெறும்
 













னைவரும் போற்றும் அன்புக்கரம் !
ர்வத்துடன் படிக்கும் இணைக்கரம் !
ணையில்லா சிறப்புடைய இந்தகரம் !
டில்லாப் புகழை இது பெறும் .
ள்ளுக்குள் உலாவரும் உறவுக்கரம்!
ரெல்லாம் புகழ்கின்ற நாள் வரும் !
ண்ணமெல்லாம் எதிரொலிக்கும் எழுச்சிக்கரம்!
ற்றத்தாழ்வை எதிர்த்து நிற்கும் இணைக்கரம்!
யத்தை நீக்கி விடும் அறிவுக்கரம் !
ற்றுமையை வளர்த்துவிடும் உயர்ந்தகரம் !
ங்கி வளர்ந்திருக்கும் ஆலமரம் !
ஓளவையின் பாடல் நல் தமிழுக்கு உரம் !
அஃதே போல் நமக்கெல்லாம் இது தரும்.!

                                                                                   கவிஞர்
                                                                     கவி  தென்றல்
                                                                          ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

அடைந்து விட்டோம் ஐ .எஸ் .ஒ


அயராது உழைத்திட்டோம் -நாம்
ஐ .எஸ் .ஒவை  .பெற்றிட்டோம் .
அயல் நாட்டு சந்தைக்குள் -நாம்
அல்லலின்றி நுழைந்திட்டோம் .

பன்னாட்டு சான்றிதழ் -நம்
பணியாளரது கடமை .
பங்கம் வராமல்  காப்பது-நம்
அனைவரது கடமை .

ஒன்றுக்கூடி உழைத்திடுவோம் .
உற்பத்தியை பெருக்கிடுவோம் .
ஒரேக் குழுவாக செயல்படுவோம் .
உலகளவில்  சிறந்திடுவோம் .

உற்பத்தி பொருளின் குறைகளை-நாம்
உடனுக்குடன் நீக்கிடுவோம்  !
வாடிக்கையாளர் அதிருப்தியை -நாம்
வராமல் இனி !தடுத்திடுவோம்

                                                         கவிஞர்
                                           கவி  தென்றல்        

                                               ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Tuesday, April 5, 2011

தலைவனின் ஏக்கம்










சந்திர பிறை நெற்றியில்
சதிராடும் கருங் கூந்தலும்,
சுந்தர வதனத்தில்
சுவை கூட்டிடும் புன்னகையும் - காணும் போது
மந்திரத்தில் கட்டுண்டு - நான்
அந்தரத்தில் மிதக்கின்றேன்!
நிரந்தரமாய் நான் வழ
நின் துணையும் வேண்டுமே!
என்று வருமோ அந்நிலை!
ஏங்குகிறேன் என் அன்பே!


                                                     கவிஞர்
                                                கவி  தென்றல்
                                             ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
       உழவன்
















ஒரு வேளை உணவிற்கு
ஏங்கும்...
ஒட்டிய வயிறு !
உழைத்து உழைத்து
ஒல்லியான உருவம் !
பகலெல்லாம் பாடுபட்டு
கருத்த தேகம் !
அடுத்தவருக்கு அடிமைப்பட்டு
அரையில் கோவணம் !
வயலின் வறட்சிக் கண்டு
வளைந்த முதுகு !
இதுதான் இன்றைய
உழவனின் உருவம் !


                                              கவிஞர்
                                       கவி  தென்றல்
                                   ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!



      யோகி















பாசமென்னும் பானைதனை
பந்தலிலே அமைத்திட்டான்!
நேசமெனும் குளிர் நீரினை
அப்பானைதனில்  நிரப்பிட்டான்!

மோசம் செய்ய வருவோர்க்கு - நல
மோர்தனை அளித்திட்டான்!
ஆசையுடன் வருவோர்க்கு - நல
ஆசிதனை வழங்கிட்டான்!

                                                               கவிஞர்
                                                  கவி  தென்றல்
                                                       ஆவடி, தமிழ் நாடு.






கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
   ஊனம்

 















பெண்ணே ...
நீ என்னைப் பார்த்தபோது
நான் குருடனானேன் !
நீ பேசியபோது ...
நான் ஊமையானேன் !
நீ சிரித்தபோது ...
நான் சிலையானேன் !
நீ என்னை விட்டு பிரிந்த போது...
நான் ஊனம் ஆனேன் !

                                                    கவிஞர்
                                      கவி  தென்றல்
                                          ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, April 1, 2011




அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
 


 











சர்க்கரை நோய்  உடலில் வந்து விட்டால்
சாகும் வரையில் உன்னை விட்டு அகலாது !
மாத்திரை மருந்து நீ உட்கொண்டாலும்
மரணம் வரை உன்னை விட்டு விலகாது !

கோட்டைக் கதவை திறந்து வைத்தால்
கோழை மன்னன் கூட படையெடுப்பான் !
சக்கரை நோய்க்கு  நாம் இடம் கொடுத்தால்
சகல நோயும் உனக்குள் வந்து விடும் !

சிறுக் காயம் உடலில் பட்டாலும்
சித்திரவதையை நீ அனுபவிப்பாய்
தூக்கம் உனக்கு  சரியாய் வராது
சுறுசுறுப்பும் உடலில் இருக்காது !

வாலிபமான உன் உடல் வாகு
வயோதியனைப்  போல ஆகிவிடும் !
ஆசைபட்ட எந்த உணவையும்
அளவுக்கு மேல் தின்ன முடியாது !

கல்லீரல்  , மண்ணீரல்  , கிட்னிஎல்லாம்
கலகலத்து உழைக்க மறுத்து விடும் !
ரத்தத்தில் சர்க்கரை கலந்து விட்டால்
இதயம் எந்த நேரத்திலும் நின்று விடும் !

உண்ணும் உணவில் கலப்படம் !
தின்னும் இடத்தில் கலப்படம் !
விளையும் இடத்தில் கலப்படம் !
விளைந்த உணவு பொருளில் கலப்படம் !

அதிகாலையில் சாலையிலே
அணி வகுக்கும் நம்மவர்கள் ,
சிறுவர் முதல் பெரியவர் வரை
சிரம பட்டு நடக்கின்றனர் , ஓடுகின்றனர் !

பரம்பரையாக வரும் நோயுமல்ல !
பாதியில் வரும் நோயுமல்ல !
கலப்படமான உணவுகளாலே
கலந்து வரும் நோயிது !

உண்ணும் உணவை தேர்ந்தெடுத்து
உண்ணும் பழக்கம் வர வேண்டும் !
உடற் பயிற்சியை செய்திடணும் !
உயர்ந்த வாழ்வினை பெற்றிடணும் !

                                                      
                                                        கவிஞர்
                              கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Sunday, March 20, 2011

    உன்னை பாராட்ட
 

 











 அன்பினால் உலகை வெல்!
ஆணவத்தை விட்டொழி !
இன்முகம் காட்டு !
ஈகையை மறவாதே !
உண்மையைப் பேசு !
ஊரோடு ஒன்றி வாழ் !
எதிரியை நண்பனாக்கு !
ஏற்றத்தாழ்வை தவிர் !
ஐக்கியத்தை நாடு !
ஒற்றுமையை வளர் !
ஓகோவென உனை பாராட்ட
ஔவை வழியை பின்பற்றி
அஃதே போல் நீ வாழ் !



                                கவிஞர்
                 கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .


கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, March 18, 2011

    முதல் நோயாளி

 












நோயாளி : ஏன்  டாக்டர்  அழுவுறிங்க?
டாக்டர் :      நான்  கிளினிக்  வச்ச  அஞ்சு  வருஷத்திலே
                        வந்த  முதல்  பேஷன்ட் நீ  தான் .
                         அதான்  ஆனந்த  கண்ணீர்  வடிச்சேன் .

                                                                               கவிஞர்
                                                               
  கவி  தென்றல்
                                                                    ஆவடி , தமிழ்நாடு
.




உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!



  அற்புத ஆண்டவர்



 























  நிலையற்ற உலகில் ஆயிரம் இருந்தும்
      மன நிம்மதியில்லை !
நீ ஆண்டவரையே அண்டியிருந்தால்
      அதிகத் தொல்லையில்லை !

ஆலயம் சென்று ஆண்டவரையே
      துதித்துப் பாடிவிடு !
பலைவனமாகிய உந்தன் வாழ்க்கை
      நல் சோலை வனமாகும் !

கல்வாரி மலையில் நம் பாவங்கள் போக்க
      தம் உயிரை நீத்தாரே !
இஸ்ரவேலுக்காக செங்கடலை
      இரண்டாய் பிரித்தாரே !

குருடு , செவிடு , ஊமை , குஷ்டம்
      குறைப் போக்கினாரே !
நம்பிக்கையுள்ள மார்த்தாளின் சகோதரனுக்கு
      உயிரைக் கொடுத்தாரே !

                                                                                 கவிஞர்
                                                                   கவி  தென்றல்
                                                                      ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!