வாலிப ஞாயிறு
வாலிப சகோதரரே வாருங்கள் !
வாலிப சகோதரியே வாருங்கள் !
அகிலமும் படைத்த தேவனை
அனைவரும் போற்றுவோம் வாருங்கள் !
பொய் சொல்லக் கூடாது நீயும் -ஒரு
பொல்லாங்கும் நினையாதே நீயும் !
அன்புடனே நடந்திடுவாய் நாளும் .
அனைவரையும் ஆட்கொள்வாய் நீயும் !
வாலிப நாளான இன்று -நல்
வாழ்வினை தொடங்கிடுவாய் நன்று !
வேதாகமத்தை கைக் கொண்டு நீயும்
தேவனை ஆட்கொள்வாய் இன்று !
முழங்கால் படியிட்டு நீயும்
முவ்வேளை ஜெபம் செய்வாய் நாளும் !
முவ்வுலக தேவனை நீயும்
முற்றிலும் அறிந்திடுவாய் நாளும் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
அருமையான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவார்த்தைகள் மிக இயல்பாக அமையப் பெற்றதால்
ReplyDeleteபடிக்கப் படிக்க சுகமாக இருக்கிறது
இர்ண்டு மூன்றுமுறை படித்துப் பார்த்தேன் அருமை
தொடர வாழ்த்துக்கள்