தலைவனின் ஆணை!
தோழா...
சிங்கமென புறப்படு!
வங்க கடல்
அலையென வா!
வீட்டை மற!
நாட்டை நினை!
நாளை நமதே!
சீற்றம் கொள்!
வெயில், மழை பாராதே!
வெற்றிக்காக உழை!
உற்சாகம் கொள்!
உதிரம் சிந்து!
உன் உயிர் ஈந்து
என் உயிர் காக்க
விரைந்து வா!
வெற்றிக் கனியை பறித்து
பாசமிகு தலைவனுக்கு
பரிசளிக்க...
குளிர்சாதன அறையிலிருந்து
குரல் கொடுத்தார்
கட்சித் தலைவர்!
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
தோழா...
சிங்கமென புறப்படு!
வங்க கடல்
அலையென வா!
வீட்டை மற!
நாட்டை நினை!
நாளை நமதே!
சீற்றம் கொள்!
வெயில், மழை பாராதே!
வெற்றிக்காக உழை!
உற்சாகம் கொள்!
உதிரம் சிந்து!
உன் உயிர் ஈந்து
என் உயிர் காக்க
விரைந்து வா!
வெற்றிக் கனியை பறித்து
பாசமிகு தலைவனுக்கு
பரிசளிக்க...
குளிர்சாதன அறையிலிருந்து
குரல் கொடுத்தார்
கட்சித் தலைவர்!
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
வெய்யில் மழை பாராதே
ReplyDeleteவெற்றிகென உழை என
குளிர்சாத அறையிலிருந்து....
என இருந்தால்
இன்னும் அழுத்தம் கிடைத்திருக்குமோ?
போலித் தலைவர்களின்
பொய்முகம் கிழித்துப்போகும்
புரட்சிப் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்