welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, May 31, 2011

  மாறு வேட போட்டி


மாறு வேட போட்டியென்றால்
மழலைகளுக்கு கொண்டாட்டம் !
மாறுவேடம் போட்டது யார் ?
நமக்கெல்லாம் திண்டாட்டம் !
வேடம் கலைந்து நின்றாலோ
எல்லோருக்கும் களிப்பாட்டம் !
பங்கு ஏற்கும் குழந்தைகளை
பார்வையாளர்கள்! பாராட்டட்டும் !
பரிசு பெறும் குழந்தைகளுக்கு
பெற்றோர் பாசத்தை பொழியட்டும் !

                                                               கவிஞர்
                                                   கவி  தென்றல்
                                                       ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, May 20, 2011


   கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்
 
 
 











ஆளுக்கொரு கரண்டியிலே
அழகானதொரு எலுமிச்சை !
ஆர்வம் கொண்ட உங்களுக்கு
நாங்கள் தரும் பரீட்சை !

கரண்டியை வாயில் கவ்விக் கொண்டு
கருத்தாய் நீங்கள் நடக்கலாம் !
பழம் நழுவி கீழே விழுந்தால்
பரிசு பெறாமல் போகலாம் !

வேகமாக அடியெடுத்து
விவேகமாய் செல்லலாம் !
வெற்றி இலக்கை சென்றடைந்தால்
பரிசுப் பெற்று செல்லலாம் !

                                                         கவிஞர்
                                  கவி  தென்றல்
                                              ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
  காலம் கடந்த யோசனை

தலை முடியில் சாயம் (டை )அடித்திருந்தால் ...
முதுமையை காட்டும்
வெள்ளி முடிகளை மறைத்திருக்கலாம் !
மேக்கப் போட்டிருந்தால் ...
இருண்ட உன் முகத்தை
இளமையாக காட்டியிருக்கலாம் !
நவீன உடைகளை அணிந்திருந்தால் ...
கவர்ச்சியாக இருந்திருக்கலாம் !
வரன் கேட்டு வந்தவர்களில்
ஒருவன்
வரதட்சணையின்றி உன்னை
வாரிக் கொண்டு
போயிருப்பானே ...
காலம் கடந்த யோசனை !
கண்ணீர் சிந்தினாள்
முப்பது வயது கன்னிப் பெண் .

                                                   கவிஞர்
                               கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Saturday, May 14, 2011

காதலர் தினம்

காதலர் தினத்தன்று
கனிந்தது நம் காதல்
நாளை...
உனக்கும் முறை மாமனுக்கும்
திருமணம்.
ஆனால்...
எனக்கு?

                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                ஆவடி, தமிழ் நாடு. 


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!


Wednesday, May 4, 2011

 தாலாட்டு  

  
 













சிப்பியிலிருந்து பிறந்த நல்முத்தே -நீ
சிறப்புடன் வாழவேண்டும் என் சொத்தே !
பாலுட்டி வளர்த்திடுவேன் நான் அன்போடு !
சீராட்டி வளரவேண்டும் நல்பண்போடு !

மழலை மொழி பேசி மயக்கிடுவாய் -எங்களை 

மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திடுவாய் !
பள்ளியில் நீயும் படித்திடுவாய் -படிப்பில்
பள்ளியில் முதல்வனாய்  வந்திடுவாய் !

தேனீக்கள் போலவே உழைத்திடுவாய் -நீயும்
தேனாய் எல்லோருக்கும் இனித்திடுவாய் !
குடும்ப பாரம் உனக்கில்லை -எந்த
குறையும் உனக்கு இங்கில்லை !

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் -உன்னை
வளர்ப்பதே எங்கள் பொது எண்ணம் !
எதிர்காலத்தில் இந்நாட்டின் மன்னன்
நிச்சயம் நீ ஆவாய் இது திண்ணம் !

                                                                             கவிஞர்
                                                                      கவி  தென்றல்
                                                                  ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

   இசை நாற்காலி போட்டி

 
 












இசையின் சத்தம் கேட்கும் போது
இணந்து ஒன்றாய் ஓடுங்கள் !
இசையின் சத்தம் நிற்கும் போது
இருக்கை ஒன்றை தேடுங்கள் !

அமர்ந்தவருக்கோ அதிஷ்டமுண்டு
அடுத்த முறை ஓடலாம் !
நின்றவருக்கோ வாய்ப்பில்லை
நிம்மதியாய் வெளியேறலாம் !

                                                         கவிஞர்
                                                 கவி  தென்றல்
                                             ஆவடி , தமிழ்நாடு . 












இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!