தென்றல்
காண இயலாத காற்றே !
கருணையில் இயற்கையின் ஊற்றே !
உயிரினங்கள் உயிர் வாழ
உறுதுணையாய் இருப்பதும் நீயே !
மேகங்களை குளிர செய்து
மழையைப் பெய்ய வைப்பதும் நீயே !
சாதி மத பேதமின்றி
சகலத்தையும் அரவணைப்பதும் நீயே !
கூலி வேலை செய்வோரின் குழந்தைகளை
தூலியில் தூங்க செய்வதும் நீயே !
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விசிறியாய் சுழல்வதும் நீயே !
பஞ்ச பூதங்களில் உன்னைத்தான்
தஞ்சம் கொள்கிறோம் நாங்கள் !
தென்றலை மிஞ்ச கூடியவர் யாருண்டு ?
தெரிந்தால் கூறுங்கள் நீங்கள் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
கவிதை தென்றலாய் மனதை
ReplyDeleteவருடிச் செல்கிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
தென்றலாய் தவழ்ந்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete