welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, December 7, 2010

           கூடி  வாழ்வோம்

காகம் இரையை கண்டுவிட்டால்
கத்திக்  கூப்பிடும் தன் இனத்தை !
கூட்டத்தில் ஒன்று இறந்திட்டால்
கூவியே சேர்த்திடும் பெரும் கூட்டத்தை !

எறும்பு உணவை பார்த்து விட்டால்
இழுத்துவரும் தன் கூட்டத்தை !
எறும்பு ஒன்று இறந்திட்டால்
ஏந்தி செல்லுமே சோகத்தால் !

பாதையில் ஒருவருக்கு விபத்தென்றால்
பயந்து ஒதுங்குகிறோம் நாமெல்லாம் !
அடுத்த வீட்டில் தீ யென்றால்
அலச்சியம் செய்கிறோம் நாமெல்லாம் !

குறைந்த அறிவு ஜீவனெல்லாம்
கூடி வாழ்வதை பார்த்தோமே !
ஆறறிவு மனிதன் நாமெல்லாம்
அவைகளை போல வாழ்வோமே !

                       கவிஞர்
                       கவி  தென்றல்
                       ஆவடி , தமிழ்நாடு .

Sunday, December 5, 2010

                     புண்

விரும்பியவள் சென்று விட்டாள்
வேறு ஒருவனுடன்!
வாழ வந்தவளுடன்
வாழ...
நான் பண்பட்டவன் அல்ல!
புண்பட்டவன்!

                 கவிஞர்
                 கவி  தென்றல்
                 ஆவடி, தமிழ் நாடு.
  வறுமை

கின்னஸ் புத்தகத்தில்
தேடி பார்த்தேன்!
உலக மக்களை
அதிகமாக...
வாட்டி வதைத்து
சாதனை புரியும்
வறுமையின் பெயரை!

                   கவிஞர்
                  கவி  தென்றல்
                ஆவடி, தமிழ் நாடு.
             பலி

கோயில்களில்
கோழி, ஆடு பலியிட தடை.
கசாப்புக் கடையில்...
தினம் தினம்
ஆயிரக்கணக்கில்
உயிர் பலி!

             கவிஞர்
             கவி  தென்றல்
             ஆவடி, தமிழ் நாடு.
 சிறைச்சாலை


நாளைய திருட்டுக்கு
திட்டம் வகுக்கும்
ரகசிய அறை!

         கவிஞர்
         கவி  தென்றல்
         ஆவடி, தமிழ் நாடு.

Thursday, December 2, 2010

நீதிமன்றம்


நீதி தேவதையின்
கையில்...
ரேஷன் கடை
தராசு!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

பிச்சைக்காரன்

சுவிஸ் வங்கியில்
கணக்கு வைத்திருக்கும்
யாசக பறவை!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

பள்ளிக்கூடம்

கல்விக்காக...
உழைப்பவரின் பணத்தை
உறிஞ்சும் அட்டை!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

முனிவர்

மண்ணாசை
பெண்ணாசை
பொருளாசை
விரும்பும்
வேடதாரி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

சாமியார்



மதங்களின்
பெயரைச் சொல்லி
மக்களை ஏமாற்றும்
சந்தர்ப்பவாதி !

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஆலயம்

பணக்காரர்களுக்கு
பக்கத்தில் தரிசனம்!
ஏழைக்கோ...
எட்டடி தூரத்தில்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

Wednesday, December 1, 2010

வக்கீல்



கத்தியே...
காசு சம்பாதிக்கும்
காரியவாதி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

வக்கீல்

உண்மையை
பொய்யாக்க
போராடும்
உண்மையான போராளி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

இறைவன்


தூணிலும் இருப்பான்!
துரும்பிலும் இருப்பான்!
வாங்கும்...
லஞ்சத்திலும் இருப்பான்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

நெசவாளர்

அடுத்தவர் மானம் காக்க
ஆடைகள் நெய்யும்
அரை நிர்வாணம்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

திருடன்



செய்யும் தொழிலை
திறமையாக செய்யும்
உழைப்பாளி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

கோயில்

 
பணத்திற் கேற்ப
பக்தி வழங்கும்
வியாபார ஸ்தலம்!



கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

மழை

மேகமே...
நீ
சந்தோஷமாய்
இருக்கிறாய் போலும்!
சோகமாய்
இருந்திருந்தால்...
உன் கண்ணீரை
மழையாக
கொட்டியிருப்பாயே!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

புயல்

மோசக்காரியே...
புயலுக்குப்பின் அமைதி.
ஆனால்...
உன் திருமணத்திற்குப் பின்
என் வாழ்வில் புயல்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.


          மக்கள் ஆட்சி
         மக்களால்...
        மக்களுக்காக...
        மக்கள் பணத்தை
       சுரண்டுவதே...
       மக்கள் ஆட்சி!

                கவிஞர்
               கவி  தென்றல்
              ஆவடி, தமிழ் நாடு.

முத்தம்

பிரியமானவளே!
நீ வளர்க்கும்
நாய் குட்டியாக
நான் இருந்திருந்தால்...
தினமும் கிடைக்குமே
முத்தம்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

விதவை

                       விதவை

விதவை எதிர் வந்தால்
விளங்காது காரியம்!
மகனை வழியனுப்பி வைத்தாள்
விதவைத் தாய்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
     
    

நதிகள்

நாளைய உலகை
ஆளப் போவது...
இளைய சமுதாயம் அல்ல!
நதிகள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

கவிஞனின் கதறல்

என்னே கவிஞன்? இவனென
     நகைக்க செய் தோர் பலர்!
இவனல்லவா கவிஞனென
     வியக்க செய் தோர் பலர்!
இயற்கை கவிஞர் நானென
     இயம்பிய இவன்
இயற்றினான் கவிதைகளை
     இயல்பாக சில
தூற்றியதை தன்
     ஏற்றமாக எண்ணியவன்,
துடிப்புடன் பன்
     கவிதைகளை பண்ணியவன்
சோக நாதங்களை சுவையுடன்
     அதில் பண்ணியவன்,
முகத்தில் வழிந்தது
     அவனது அவமான கண்ணீர்.

பசியைப் போக்க கவிதை
     பண்ணுவோர் பலர்!
பணம் சேர்க்க பாடல்
     செய்வோர் பலர்!
புகழ் சேர்க்க செய்யுள்
     புனைவோர் பலர்! - என் போல்
இகழ் சேர்க்க கவிதை
     இயற்றுவோர் சிலர்
இயற்கை கவிஞனோ?
     செயற்கை கவிஞனோ?
யான் அறியேன்!
     பொய்யும் மெய்யும் கலந்து
புனைவதற்கும் யான் அறியேன்
     அகத்திரையில் அலைக் கழிக்கும்
அக்கற்பனையைக் கொண்டு
     புறத் திரையில் புகழ் மணக்கும்
புதுக் கவிதைகளைப் புனைந்திடுவேன் யான்!


                                                                               கவிஞர்
                                            கவி  தென்றல்
                                                                ஆவடி, தமிழ் நாடு.

ஒரே குலம்! ஒரே இனம்!

அந்தி சாயும் வேளையிலே - அந்த சோலையில்
ஆயிரம் குரல் கேட்குமே - அந்த வேலையில்
உவகையுடன் ஓடி சென்ற - எந்தன் காதிலே
உறுதியாக-ஒலித்ததுவே அந்த கானங்கள்!u

மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாருங்கள்!

ஆண்டவனின் படைப்பினிலே நாங்கள் ஓரினம்
அதுபோல நீங்களும் ஓரினமே!
காகம் முதல் கழுகுவரை பல இனங்கள்
காட்டில் வாழும் பறவைகளோ பல இனங்கள்!

எத்தனையோ இனங்களுண்டு எங்களிடத்தில்
ஏற்றத்தாழ்வு இல்லையே எங்களிடத்தில்!
ஒன்று முதல் நான்கறிவு எங்களுக்குண்டு
ஒற்றுமையும் எங்களது கூட்டத்திலுண்டு!

உயர்ந்தறிவாம் பகுத்தறிவு உங்களுக்குண்டு
உங்களிடத்தில் பலஜாதி பேதமும் உண்டு!
மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாழுங்கள்!

பல இனங்கள், பல மொழிகள், பல ஜாதிகள்
பரந்து கிடக்கும் நம் பாரத நாட்டில்
ஒற்றுமையாய் வாழ்வோமென குரல் கொடுங்கள்!
ஒரே குலம் ஒரே இனமென சிந்து பாடுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

மாமியார்

மாமியாரை
கொடுமைப் படுத்தினாள்
மருமகள்!
நாளை...
தானும் ஒரு மாமியார்
என்பதை மறந்து!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

Friday, November 26, 2010

அய்யகோ தேர்தல்

அய்யகோ தேர்தல்

தேர்தல் தேர்தல்!
தேசமெங்கும் தேர்தல்!
வண்ணக்கொடிகள் பவனி வரும்
வழக்கமாய் வரும் தேர்தல்!

வர்ண ஜால மேடையில்
வகைவகையாய் பேச்சுக்கள்!
வாரியிறைக்கும் வாக்குறிதிகள் - அதில்

வாய் இனிக்கும் வாக்காளர்கள்!

ஆண்டு ஐந்து அனால்
ஆடி வரும் தேர்தல்!
அடிப்பட்டு மிதிப்பட்டு
அல்லல் பட்டு

அடிமட்ட தொண்டர்கள்
மிதிப் பட்டு
கள்ள ஒட்டு நல்ல ஒட்டு

கலந்துப் போட்டு.

களத்தில் நிற்கும் வேட்பாளரை
தேர்ந் தெடுத்து
நாட்டுக்கு நலன் செய்ய
நாம் அனுப்பும் தேர்தல்!

ஏமாற்றலாம் என்றெண்ணி
வந்தவர்கள் நினைத்திட்டால்!
ஏமாறியேப் போவார்கள்
அடுத்த தேர்தல் வந்திட்டால்!

சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டோம்
தொகுதி மக்கள் நாங்களும்!
செய்வதையெல்லாம் செய்யுங்கள்
தேர்வுப் பெற்ற நீங்களும்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

சோகம்

சோகம்

மதவெறியும் இன வெறியும்
மலிந்துள்ள இந்நாட்டில்
என் போன்ற மழலைகளின்
எதிர்காலம் என்னவாகும்?

நிகழ் காலத்தில் எதிர்காலத்தை
எதிர்நோக்கும் இவளுக்கு
என்ன பதில் கூறுவது?
எல்லோரும் சிந்தியுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

                        இடி, மின்னல்


வானில்
வெடி (இடி) சத்தமும்
தீப்பிழம்பும் (மின்னல்)
மேகங்களே...
உங்களிடமும்
தீவிரவாதிகளின்
ஊடுருவலா?

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 சினிமா நடிகை


தாலி கட்டியவனுக்கு
      மனைவியும் அல்ல!
பெற்ற பிள்ளைக்கு
     தாயுமல்ல!
பெற்றவருக்கு
      பெண்ணுமல்ல!
வாங்கும் பணத்திற்கு
      உரிமையுள்ளவள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

இலவச வேலைக்காரி

         இலவச வேலைக்காரி


சம்பளம் இல்லை!
மருத்துவம் இல்லை!
ஓய்வு இல்லை!
விடுமுறை இல்லை!
போனஸ் இல்லை!
முழு நேர வேலைக்காரியாக
என் மகன் வீட்டில்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்


அன்று...
மகாராணியாக வாழ்ந்த
நான்!
இன்று... 
மகன் வீட்டில்  
சம்பளம் இல்லா
வேலைக்காரியாக!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 கொலுவில் இருப்போரே 
                   நினைவில் இருத்துங்கள்...


வெற்றிப்பெற்ற   வேட்பாளர்கள்
வீற்றிருக்கும்     மத்தியில்!
தொகுதிதனை    நினைக்கணும்
தொண்டாற்றி     மகிழனும்.

வஞ்சமற்ற       மக்களை - தம்
நெஞ்சமதில்      வைக்கணும்!
கொஞ்சமுள்ள    குறைகளை
மிஞ்ச நிறைவு    செய்யனும்!

ஆண்டுக்          கொன்றாகிலும் - தொகுதியில்
அடியெடுத்து      வைக்கணும்!
வாட்டமுற்ற      ஏழைகளுக்கு பல
வசதிகளை        செய்யனும்!

வெற்றிப்பெற்ற     மமதையில்
வேறு நிலை       காட்டினால்?
அடுத்து வரும்     தேர்தலில்
அதற்கு பதில்      வந்திடும்!



                                                                        கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                                 ஆவடி, தமிழ் நாடு.

Thursday, November 25, 2010

தேர்தல்

தேர்தல்


ஓட்டு வாங்கி ஏமாற்றும்
வேட்பாளர்கள்!
ஓட்டுப் போட்டு ஏமாறும்
வாக்காளர்கள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஏமாளிகள்

 ஏமாளிகள்


புதிய கட்சிகள்!
புதிய முதலமைச்சர்கள்!
புதிய மந்திரிகள்!  
இவர்களுக்கு...
ஒட்டிய வயிற்றுடன்
ஓட்டுப் போடும் ஏமாளிகள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

எதை அழிப்பது?

                    எதை அழிப்பது?


தனியொரு மனிதனுக்கு
உணவில்லையேல்...
இந்த
தரணியை அழித்திடுவோம்!
தரணியில் வாழும் மக்களுக்கு
உண்ணவில்லையே...
எதை அழிப்பது?


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

நினைவுத் தூண்கள்

                  நினைவுத் தூண்கள்


என் முகத்தில் வளர்ந்திருப்பது
தாடி அல்ல ...
பெண்ணே!
உன்
காதல் தோல்வியால்
நான்
கட்டி வைத்திருக்கும்
நினைவுத் தூண்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

அரசியல் வாதி

                     அரசியல் வாதி




என் மகன் ...
கொலைக்காரன் !
கொள்ளைக்காரன் !
பிறரை ஏமாற்றுவதில் கில்லாடி !
நான் பெருமை படுகிறேன் !
நாளை ...
அவன் சிறந்த
அரசியல் வாதியாக
வருவான் என்று !


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஹைக்கூ கவிதைகள்

  
குடை

தன்னை நனைத்து
உன்னை காக்கும்
தன்னலமற்றவன்.  






வேசிக்கு

கொலை!
கொள்ளை!
கற்பழிப்பு!
வேலையில்லா திண்டாட்ட   
வேசிக்கு பிறந்த
குழந்தைகள்.




ரேஷன் அரிசி

ரேஷன் கடையில்
வாங்கி வந்த கல்லில்
அரிசியைப் பொறிக்கினாள்  
அம்மா!




 
கத்தி

கத்தியைக் காட்டி
வழி மறித்தான்
திருடன்!
கத்தியே
கூட்டத்தை சேர்த்தாள்  
அவள்!



  
மனிதன்

பெண்ணே!
நீ...
பெற்றவருக்கு பயந்து
தீயிக்கு இரையானாய்!  
நான்...
மற்றவருக்கு பயந்து
மனிதனானேன்.



கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 

மன்னித்து விடு சகோதரி

           மன்னித்து  விடு  சகோதரி

நல்ல  உயரம் ...
நான்  விரும்பும்  நிறம் ...
குனிந்த  தலை  நிமிராத குணம் ...
அடுத்தவரிடம்  அளவான  பேச்சு ...
கபடமில்லா முகம் ...
காண்பவரை  மயக்கும்  அழகு ...
எனக்கு  ஏற்றவள் ...
நீதான் !

உன்னை  பெண்  பார்க்க  வருமுன்
உன்  வீடு  காண
பின்  தொடர்ந்தேன் !
அப்போது  தான் தெரிந்தது
நீ ...

மணமானவள்  என்றும்
இரண்டு  குழந்தைக்கு  தாய்  என்றும் !
என்னை ...
மன்னித்து  விடு  சகோதரி .


                          கவிஞர்
                         கவி   தென்றல்
                         ஆவடி ,  தமிழ்நாடு .

தரமே தொழிலுக்கு உரமே

தரமே  தொழிலுக்கு  உரமே


உடல்  என்ற  மூன்றெழுத்தும்    
உயிரென்ற  மூன்றெழுத்தும்
தரமென்ற  மூன்றெழுத்தில்
இணைவதுதான்  கடமை .

ஆக்க  பணிகள்  அனைத்திலும்
ஊக்கங்  கொண்டு  பொருகளை
குறைநீக்க  வகை  செய்யனும்
நினைவில்  தரத்தை  இருத்தனும் . 

உலக  மெங்கும்  சந்தையில்
உருவாக்கும்  பொருள்  செல்லனும்
உலக மக்கள்  யாவரும் -அதை
ஓர் குரலில்  புகழனும் .

படித்ததினால்  வந்திடுமோ  தரம் -கருத்தோடு
பார்த்தால் தான் வருமே  தரம் .
தானே  உருவாகுமோ தரம் -கடின
உழைப்பால்  வருவதே  தரம் .

விளம்பரத்தால்  வருவதில்லை  தரம் -குறைந்த
விலையால்  நிலைப்பதில்லை தரம் .
ஆள்பலத்தல் வருவதில்லை  தரம் -கருத்து
அரவணைப்பால்  உருவாவதே  தரம் .


                கவிஞர்
               கவி   தென்றல்       
               ஆவடி ,  தமிழ்நாடு .    

விண் மீன்கள்

  விண் மீன்கள்


விண்ணவருக்கு ஒளி கொடுக்க
மின்னுகின்ற விண் மீன்களே
மண்ணில் வாழும் மாந்தர்க்கு
மனக்குறையை போக்கும் விண் மீன்களே!

உண்ண மறக்கும் குழந்தைகளுக்கு
உணவு ஊட்டும் தாய்மார்கள்
உன்னை நோக்கி கைக் காட்டி
உணவை ஊட்டி மகிழ்கின்றனர்!

வானநூல் அறிஞர்கள் யாவரும்,
வளம் வரும் உன்னைக் கண்டு,
காலம் நேரம் காற்று மழையை
கண்டிட உதவும் விண்மீன்களே!

தேவ மைந்தன் இயேசு கிறிஸ்து,
பாவ உலகில் பிறந்த அன்று
விண்ணில் தோன்றி யாவரையும்,
வியப்பில் ஆழ்த்திய விண்மீன்களே!



                                                             கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                     ஆவடி, தமிழ் நாடு.

Monday, November 22, 2010

ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !

    ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
நம்மில்...
ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு !
பாரதியின் கவிதை இது!
நமக்கு
பயன் தரும் மருந்து இது !

ஒரு கை ஓசைத் தருமா ?
இரு கைகள் இணைந்தால் தானே
ஓசை வரும் !
பள்ளி யிலே...
படிக்க வில்லையா?
பசு சிங்கம் கதை !

ஒற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பயந்தது !
வேற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பாய்ந்தது !
புறா வேடன் கதை
நமக்கு...
புரிய வைக்கும்
ஒற்றுமையை!

வேடன் விரித்த வலையிலே
சிக்கிக் கொண்ட புறாக்கள்
தம் உயிரை காத்து கொண்டது
உயர் ஒற்றுமையால் வந்ததல்லவோ ?
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் !
வளமாய் வாழ்ந்திடுவோம் !
                                  

                                            கவிஞர்
                                            கவி தென்றல்
                                            ஆவடி, தமிழ்நாடு .





வளர்ச்சி

வளர்ச்சி
                                  
இளைய  சமுதாயமே ...
நீ
சுயமாக  சிந்தித்தால்...
வழி  பிறக்கும் !
சுயத்தொழில்  தொடங்கினால் ...
நல்ல  எதிர்காலம்  இருக்கும் !
என்னால்  என்ன  முடியும் ?
என  எண்ணாதே !
எல்லாம்  முடியும்
என  திடன்  கொள் !
வெற்றிப்பாதை
கரடு  முரடானது  தான்!

அதை
காட்டாறுப்  போல்
கடந்து  செல் !
தடைகளை  எல்லாம்
தகர்த்து  எறி!
தோல்வியை க் கண்டு
துவண்டு  விடாதே !
தோல்வியை  உன்
தோள் மீது  சுமந்து  செல் !
தோல்விதான்
வெற்றி  பாதைக்கு
வெளிச்சம்  தரும்  விளக்காகும் !
அன்றுதான்
உன்னுடைய  கடின  முயற்சி...
காண்பவரை  கண்விரிய  செய்யும் !
திறமை ...
திக்கெட்டும்  பரவும் !
உழைப்பை ...
உலகமே  போற்றும்!
அன்பு ...
அகிலமெல்லாம்  விளங்கும் !
பண்பு...
பிறரை  உன்பக்கம்  ஈர்க்கும்!
நாவடக்கம் ...
நல்லோரை  சேர்க்கும் !
சொல்வண்ணம்...
சொன்னதெல்லாம்  செய்யும் !
வளர்ச்சி
...
வளர்
ந்
தோரை  அண்ணாந்து
பார்க்க  வைக்கும் !


                                       கவிஞர்
                              கவி  தென்றல்
                               ஆவடி ,  தமிழ்நாடு .