அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
சர்க்கரை நோய் உடலில் வந்து விட்டால்
சாகும் வரையில் உன்னை விட்டு அகலாது !
மாத்திரை மருந்து நீ உட்கொண்டாலும்
மரணம் வரை உன்னை விட்டு விலகாது !
கோட்டைக் கதவை திறந்து வைத்தால்
கோழை மன்னன் கூட படையெடுப்பான் !
சக்கரை நோய்க்கு நாம் இடம் கொடுத்தால்
சகல நோயும் உனக்குள் வந்து விடும் !
சிறுக் காயம் உடலில் பட்டாலும்
சித்திரவதையை நீ அனுபவிப்பாய்
தூக்கம் உனக்கு சரியாய் வராது
சுறுசுறுப்பும் உடலில் இருக்காது !
வாலிபமான உன் உடல் வாகு
வயோதியனைப் போல ஆகிவிடும் !
ஆசைபட்ட எந்த உணவையும்
அளவுக்கு மேல் தின்ன முடியாது !
கல்லீரல் , மண்ணீரல் , கிட்னிஎல்லாம்
கலகலத்து உழைக்க மறுத்து விடும் !
ரத்தத்தில் சர்க்கரை கலந்து விட்டால்
இதயம் எந்த நேரத்திலும் நின்று விடும் !
உண்ணும் உணவில் கலப்படம் !
தின்னும் இடத்தில் கலப்படம் !
விளையும் இடத்தில் கலப்படம் !
விளைந்த உணவு பொருளில் கலப்படம் !
அதிகாலையில் சாலையிலே
அணி வகுக்கும் நம்மவர்கள் ,
சிறுவர் முதல் பெரியவர் வரை
சிரம பட்டு நடக்கின்றனர் , ஓடுகின்றனர் !
பரம்பரையாக வரும் நோயுமல்ல !
பாதியில் வரும் நோயுமல்ல !
கலப்படமான உணவுகளாலே
கலந்து வரும் நோயிது !
உண்ணும் உணவை தேர்ந்தெடுத்து
உண்ணும் பழக்கம் வர வேண்டும் !
உடற் பயிற்சியை செய்திடணும் !
உயர்ந்த வாழ்வினை பெற்றிடணும் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
No comments:
Post a Comment