சுமை
ஏர் பிடித்து உழுகின்ற
உன்னருகில்
ஏன் அந்த இளமொட்டு?
பசி!
பட்டினி!
கடன்!
இல்லாமை!
உன் தலையிலுள்ள சுமைகளை
அவள் தலையில் இறக்கி வைக்கவா?
ஏர் பிடித்து உழுதவன் வாழ்வில்
ஏற்றம் கண்டதுமில்லை!
இந்த உலகம்
வாழ விட்டதுமில்லை!
வேண்டாம்...
இந்த விபரீத விளையாட்டு!
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
வலிதரும் கவிதைவரிகள் அருமை!.....
ReplyDeleteவாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள்
ஆக்கங்கள் சிறப்புற....................