welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 25, 2011

ஒரே குலம்! ஒரே இனம்!

அந்தி சாயும் வேளையிலே - அந்த சோலையில்
ஆயிரம் குரல் கேட்குமே - அந்த வேலையில்
உவகையுடன் ஓடி சென்ற - எந்தன் காதிலே
உறுதியாக-ஒலித்ததுவே அந்கானங்கள்!

மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே  எல்லோரும் கூடி வாருங்கள்!

ஆண்டவனின் படைப்பினிலே நாங்கள் ஓரினம்
அதுபோல நீங்களும் ஓரினமே!
காகம் முதல் கழுகுவரை பல இனங்கள்
காட்டில் வாழும் பறவைகளோ பல இனங்கள்!

எத்தனையோ இனங்களுண்டு எங்களிடத்தில்
ஏற்றத்தாழ்வு இல்லையே எங்களிடத்தில்!
ஒன்று முதல் நான்கறிவு எங்களுக்குண்டு
ஒற்றுமையும் எங்களது கூட்டத்திலுண்டு!

உயர்ந்தறிவோம் பகுத்தறிவு உங்களுக்குண்டு
உங்களிடத்தில் பலஜாதி பேதமும் உண்டு!
மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே  எல்லோரும் கூடி வாழுங்கள்!

பல இனங்கள், பல மொழிகள், பல ஜாதிகள்
பரந்து கிடக்கும் நம் பாரத நாட்டில்
ஒற்றுமையாய் வாழ்வோமென குரல் கொடுங்கள்!
ஒரே குலம் ஒரே இனமென சிந்து பாடுங்கள்.

                                                                                 கவிஞர்
                                                                              கவி  தென்றல்
                                                                          ஆவடி, தமிழ் நாடு.

நில்லுங்கள் !கொஞ்சம் நில்லுங்கள் !
சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை சொல்லுங்கள் !

Monday, January 24, 2011

EXERCISE - HUMAN`S HEALTH LOVE

 EXERCISE - HUMAN`S HEALTH LOVE


Blood is liquid love
give it  to others !
Gold is rich love
divide it  to poor !

sweet is diabetes love
advice it  to others !
Bold is youngest love
encourage it to younger !

Pollution is disease love
avoid it at all times !
Fat is dead love
reduce it and maintain it !


EXERCISE - is health love
do it every day !

               

                   kavinyar
            kavi tendral
               avadi , tamilnadu .

Sunday, January 23, 2011

சுரண்டல் நாய்கள்
நாட்டை சுரண்டி
சுவீஸ்
வங்கியில் போடும்
சுரண்டல்
நாய்களை ...
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட ஓட
விரட்டி
சுட்டுத் தள்ளனும் !

                                     கவிஞர்
                                கவி  தென்றல்
                             ஆவடி , தமிழ்நாடு .

Thursday, January 20, 2011

        நாகரிக மோகம்


நாகரிக மோகம் கொண்டு
நகரை நோக்கி செல்லுகின்ற
நண்பனே! எனதுயிர் நண்பனே!

ஊரை விட்டு ஊர் சென்று
உழைக்கும் எண்ணம் ஏன் வந்தது?
நண்பனே! எனதுயிர் நண்பனே!

ஏர் பிடித்து உழுகின்ற உந்தன் கைகள்
என்றுமே தாழ்ந்ததில்லை பிறர்கையில்!
நாட்டிற்க்கு நீங்கள்தான் உயிர் நாடி
நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னாடி!

சுற்றுப் பயணம் செல்வதென்றால் சென்றுவா!
சுகாதாரம் அங்கில்லை கண்டுவா!
வேலைக்கிடைப்பதென்றால் குதிரைக் கொம்பு!
வேண்டுமென்றே வாங்க வேண்டாம் ஊர்வம்பு.

ஏமாற்றி பிழப்பவனே அறிவாளி அங்கே
ஏமாறி வாழ்பவனே உழைப்பாளி!
சோம்பேறிக்கு சொர்க்கம் நகரம்தான் - அங்கே
உழைப்பாளிக்கு என்றுமே நரகம்தான் .


                              கவிஞர்
                             கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ் நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 

Sunday, January 16, 2011

 வாவில்

மேகங்களே!

நீங்கள்
எப்போது
கட்சி ஆரம்பித்தீர்கள்?
ஏழு வண்ணத்தில்
கொடித் தெரிகிறதே...!


            கவிஞர்
           கவி  தென்றல்
          ஆவடி, தமிழ் நாடு.
                               சிரிப்பு

சோமு : அந்த ஆளு  ஏண்டா ரெண்டு
         காலிலே ரெண்டு  வித  செருப்பை
         போட்டுக்கிட்டு  போறாரு ?

 ராமு :    கல்யாண  வீட்டிலே  அதான் கிடைச்சுதாம்.

                                                         
                                                                                                                     கவிஞர்             

                                                                            கவி தென்றல்   
                                                                                               ஆவடி , தமிழ்நாடு .
                                         சிரிப்பு

சுரேஷ் : டேய்  ஆச்சரியமா  இருக்கு , நம்ம
         ஆபீசிலே கார்பரேஷேன் ஆள்
         கழிவு  நீர்  தொட்டியை  சுத்தம்  செய்கிறான் .

ரமேஷ் : நல்லா  பாருடா ! அது நம்ம  மேனேஜர் .
         அவரது  மோதிரம்  உள்ளே  விழுந்திடுச்சாம் .
         அதான்  சுத்தம்  பண்றார் .
            
                                                         

                                          கவிஞர்
                                                         

                                        கவி  தென்றல்
                                                         


                                       ஆவடி , தமிழ்நாடு .

Wednesday, January 5, 2011

                                     சிரிப்பு

பாபு ;  ஊசியிலே நூல்  கோர்க்கும்
       போட்டியிலே  எங்க  அம்மாவுக்குதான்
       முதல்  பரிசு .

கோபு ; எப்படிடா ?

பாபு :  வீட்டிலேயே  நூலை  கோத்துகிட்டு
       பொயிட்டாங்க.              
          
                                                         

                              கவிஞர்
                             கவி  தென்றல்               

                            ஆவடி , தமிழ்நாடு .

Tuesday, January 4, 2011

                                                   சிரிப்பு


வழிப்போக்கன் : ஏன் சார் பையனை அடிக்கிறிங்க ?

மற்றவர்       : இவன் செய்த காரியத்துக்கு
                           அடிக்காம என்ன செய்றது ?

வழிப்போக்கன் :   அப்படி என்ன செய்தான் ?

மற்றவர்        :  போர் அடிக்குது டிவியை
                            போடுடான்னு சொன்னதுக்கு டிவியை
                           கீழே போட்டுட்டான் .

                                                         

                                            கவிஞர்       

                                           கவி  தென்றல் 

                                         ஆவடி, தமிழ்நாடு.
                                        சிரிப்பு

ரம்பா :  ஏண்டி  உன்  கணவருக்கு  இனிப்பை
        ஊட்டி  விடுறே ?

ஊர்வசி : டாக்டர் அவரை இனிப்பை கையாலே
         தொடவேக்  கூடாதுன்னு  சொல்லிருக்கார்

                                                         

                                                                            கவிஞர்
                                                         

                                                                         கவி  தென்றல்
                                                         

                                                                      ஆவடி , தமிழ்நாடு .
   சிரிப்பு

நோயாளி : டாக்டர்  ஆப்பிரேஷன்  பீசை  பணமா
           கொடுக்கனுமா ? இல்லே செக்கா
           கொடுக்கனுமா ?

டாக்டர் :   எப்படிக்  கொடுத்தாலும் , உங்க
           ஆப்பிரஷனுக்கு  முன்னாடியே
           கொடுத்திடுங்க .

நோயாளி : ஏன் டாக்டர் ?

டாக்டர் :   உங்க  ஆப்பிரஷனுக்கு பிறகு  பணத்தை
           யார்  கொடுப்பாங்க  அதுக்குதான் .

                                                         

                                      கவிஞர்
                                                         

                                      கவி  தென்றல்
                                                         

                                      ஆவடி , தமிழ்நாடு .
                               
                                              சிரிப்பு


மாலா: அந்த டாக்டர்  போலி டாக்டர்ன்னு
                எப்படி  கண்டுப்பிடிச்சே ?
கலா :    உடைந்துப்  போன எலும்பை  உருக்கி
                ஓட்டிடலாம்னு  சொல்றாரு .

                                     கவிஞர்
                                    கவி  தென்றல்
                                   ஆவடி , தமிழ்நாடு .
 புத்தாண்டே வருக

புத்தாண்டே வருக !
புது  பொலிவுடனே  வருக !
கடந்த ஆண்டு செழிப்பினை
கையோடு கொண்டு வருக !

ஏழை ,எளியோர் வாழ்வு முன்னேற
எழுச்சிக் கொண்டு நீ வருக !
வாழத் துடிக்கும் மக்களுக்கு
வழித் துணையாய் நீ வருக !

புயல் ,பூகம்பம், சுனாமி வேண்டாம் !
போர், கலகம், தீவிரவாதம் வேண்டாம் !
கொலை, கொள்ளை,பாலியல் வேண்டாம் !
சாதி, மத, சமயம் வேண்டாம் !

உலக மக்கள் ஒற்றுமையாய் வாழ,
உலக நாடுகள் சமாதானத்தை நாட,
நல்லதையே எதிர்நோக்கும் எங்களுக்கு
நன்மைகள் செய்திட நீ வருக !

கடந்த கால நிகழ்வுகளைக் கண்டு
கண்ணொளி இழந்த எங்களுக்கு 
புத்தொளியாய், புது பெலனாய்
புறப்பட்டு வா புத்தாண்டே !

                       கவிஞர்
                      கவி  தென்றல்
                     ஆவடி, தமிழ்நாடு .     
   பூனை

பூனைக் கழுத்தில்
மணி கட்ட
புறப்பட்டது
எலி !
பூனை இறந்த
செய்திக் கேட்டு !

               கவிஞர்
              கவி  தென்றல்
             ஆவடி, தமிழ்நாடு .
  ஆண்டவரின் வருகை

வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !
உலகின் முடிவில் நியாயம் தீர்க்க
உன்னத தேவன் வருகிறார் !

கனி கொடாத மரங்களை வெட்டி
பாழும் நெருப்பில் போடவும் ,
நீதி தவறா மனிதர்களை தன்
வாழும் இடத்தில் சேர்க்கவும் ,
வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !

கள்வர் வருகையை கனவான் அறிந்தால்
காத்துக் கொள்வான் தன் உடைமைகளை !
கர்த்தர் வருகை அவ்விதமிருக்கும்
காத்துக் கொள் உன் ஆத்துமாவை !
வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !

                            கவிஞர்
                         கவி  தென்றல்
                        ஆவடி , தமிழ்நாடு .
 பந்தை கடத்தும் போட்டி

பந்தை கடத்தும் போட்டியில்
பங்கு பெற  வாருங்கள் !
பாங்குடனே  கலந்துக்கொண்டு
பாராட்டு பரிசுகளை வெல்லுங்கள் !

வட்டம் ஒன்று அமைத்து
வரிசையாக நில்லுங்கள் !
பந்தைக் கையால் பிடித்து
பக்கம் நிற்பவரிடம் கடத்துங்கள் !

ஊதல் சத்தம் கேட்கும்  போது
உன்னிடத்தில் பந்து இருந்தால்
உவகையோடு  வெளியேற
உள்ளம் உனக்கு  வேண்டுமே !
                                 
                                      
                         கவிஞர்
                       கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .
நல்லதுக்கு காலமில்லையே

நல்லதுக்கு காலமில்லையே! - இவ்வுலகில்
நல்லவர்க்கு காலமில்லையே
உள்ளதை உள்ளபடி சொன்னாலும்
உலகம் அதை நம்பவில்லையே!

எத்தனை இன்னல்கள்
எப்படித்தான் வந்தாலும்
அப்படியே சொன்னாலும்
அடுத்தவர் நம்பவில்லையே! - அது
அறிந்தவர்க்கும் விளங்கவில்லையே!
நல்லவர் சொன்னதை,
நாடே செய்தாலும்
புல்லர்களுக்கு புரியவில்லையே! அவர்கள்
புத்தியிலும் ஏறவில்லையே!

ஏழை எளியோர்க்கு சோறில்லையே!
ஏழடுக்கு மாளிகையில் பசியில்லையே!
ஏற்றத் தாழ்வு  இங்கே அழியவில்லையே !
எதிர்த்தவர்கள் இவ்வுலகில் வாழ்வதில்லையே  !

                              கவிஞர்
                             கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ் நாடு.
கல்யாணப் பெண்ணின் கதறல்

சின்ன சின்ன ரோசாவே!
சிவந்த இதழ் ரோசாவே!
வண்ண வண்ண ரோசாவே!
வாசனை உள்ள ரோசாவே!

அள்ளி முடித்த கூந்தலிலே!
கிள்ளி வைத்த ரோசாவே!
பள்ளி அறையின் கட்டிலிலே!
சொல்லிக் கொடுத்திடு ராசாவே!

மங்கை எந்தன் அணைப்பினிலே
மயங்க வந்த ராசாவே!
சங்கமம் ஆகும் வேளையிலே
எங்கே போனாய் ராசாவே!

அந்தி மயங்கும் மாலையிலே!
தந்தி வந்த வேளையிலே!
கண்ணா உந்தன் நினைவினிலே!
கலங்கி நின்றேன் தனிமையிலே!

இறந்துப் போன உன்னிடத்தில்
பறந்து வந்து சேர்ந்திடுவேன்!
பரந்த உந்தன் மார்பினிலே
சிறந்து வாழ வந்திடுவேன்!

                     கவிஞர்
                    கவி  தென்றல்
                  ஆவடி, தமிழ் நாடு.
சண்டையில்லை எங்களுக்குள்

சின்னப் பொண்ணு சிரிக்கிறா!
சேலைக் கட்டி மயக்குறா!
கண்ணாலே என்னைப் பாத்து
காதலிக்க அழைக்கிறா!

சின்னப் பையன் மொறைக்கிறான் - என்
சேலையைப் பார்த்து சிரிக்கிறான்!
முன்னலேப் போக விட்டு
பின்னே நின்னு அழைக்கிறான்!

தண்ணிக் குடத்தை இடுப்பில் வைத்து
தளுக்கி தளுக்கி நடக்குறா
தாகம் மிகுந்த எனக்கு கொஞ்சம்
தண்ணிக் கொடுக்க மறுக்குறா!

தாகம் என்று வந்தவனும் - என்னை
மோகத் தோடு பாக்குறான்!
பேதையாகிய எந்தன் மனதில்
போதை யேற்ற பாக்குறான்!

அறுவடை ஆகும் நேரத்திலே - என்
அருகில் வர பாக்குறான்!
குதிரில் நெல்லைக் கொட்டும்போது
பரிசம் போடா நிக்கிறான்!

பரிசம் போட போன என்னை
பாதை யிலே தடுக்குறா!
பரிச்சத்தோடே எந்தன் மார்பில்
பரந்த மாக சரிகிறாள்!

பொங்கல் வரும் தையிலே
பொழுது விடியும் காலையில
தங்க சரடு அவள் கழுத்து தாங்க - அவள்
தளிர்மேனியை என்மேனி தாங்க,
பொங்கி வரும் இன்பத்திலே!
சண்டை யில்லை எங்களுக்குள். 

                      கவிஞர்
                    கவி  தென்றல்
                   ஆவடி, தமிழ் நாடு.
  கோயில் பூசாரி

தட்டில் விழும் காசுக்கு
தலையாட்டும்
தரகன்!

              கவிஞர்
             கவி  தென்றல்
            ஆவடி, தமிழ் நாடு.

Monday, January 3, 2011

  பள்ளம்

வாகனங்களுக்கு
வேகத் தடை!


            கவிஞர்
           கவி  தென்றல்
         ஆவடி, தமிழ் நாடு.
        லஞ்சம்

அவசர தேவைக்கு
உதவும்
ஆத்ம நண்பன்!


             கவிஞர்
            கவி  தென்றல்
          ஆவடி, தமிழ் நாடு.
  வரதட்சணை

கை நிறைய வளையல்கள்!
கழுத்து நிறைய நகைகள்!
மாப்பிள்ளைக்கு வண்டி!
சூட்கேசில் பணம்!
சூழ...
புகுந்த வீடு புகுந்த
மறுநாள்........
வெடித்தது ஸ்டவ்!

              கவிஞர்
             கவி தென்றல்
            ஆவடி  தமிழ்நாடு.
  பட்டதாரி

பிச்சைக்காரனிடம்
கையேந்தும்...
வேலையில்லாப்
பட்டதாரி!


          கவிஞர்
         கவி  தென்றல்
       ஆவடி, தமிழ் நாடு.
 தேர்தல் நாள்

ஏழைகளுக்கு
     வயிறார பிரியாணியும்
கை நிறைய காசும்
      தரும்
சுதந்திர தினம்.


                   கவிஞர்
                  கவி  தென்றல்
                ஆவடி, தமிழ் நாடு.
 விலை மாது

தன்னை
நாடி வருவோர்க்கு
எய்ட்சை
வாரி வழங்கும்
வள்ளல்.


         கவிஞர்
       கவி  தென்றல்
     ஆவடி, தமிழ் நாடு.