welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, February 28, 2011

  இது என்ன நீதி ?

இறைவா ...
இது என்ன நீதி ?
நீ ...
பக்தர்களுக்கு உதவி செய்து
காணிக்கை வாங்குகிறாய் !
உன்னைப் போல்
நான் ...
நண்பர்களுக்கு உதவி செய்து
பணம் வாங்கினேன் !
உயர் பதவியில் இருந்த
என்னை ...
பணி நீக்கம் செய்து விட்டார்கள் !
நான்
வாங்கிய பணம்
லஞ்சமாம் !

                                 கவிஞர்
                     கவி  தென்றல்
                        ஆவடி , தமிழ்நாடு
.


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..
         கேப்டன்

மதுரையில் பிறந்த என் மன்னவனே !
தமிழரைக் காக்க வந்த காவலனே !
மற்றவருக்கு உதவுகின்ற தலைவனே !
மக்கள் மனதில் நிலைத்திருப்பது நீதானே !
 

கருமுகில் வண்ணம் கொண்டவனே !
கருணை வடிவமாய் நிற்பவனே !
திரையுலகில் முடிசூட மன்னவனே !
தினமும் நாங்கள் நினைப்பது உன்னைத்தானே !

நண்பர்களை அரவணைக்கும் சந்திரனே !
பகைவர்களை சுட்டெரிக்கும் சூரியனே !
சாதி ,மத பேதங்களை வெறுப்பவனே !
சகோதர தத்துவத்தை வளர்ப்பவனே !

கொடுத்து மகிழ்வதும் நீ தானே !
கொடுத்து சிவப்பதும் உன் கை தானே !
ஏழை வாட்டத்தை போக்குவதும் நீ தானே !
நாங்கள் எல்லோரும் தொழுவது உன்னைத்தானே !

                                                                           
                                                                       கவிஞர்
                                                            கவி  தென்றல்
                                                                ஆவடி , தமிழ்நாடு .


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் . ப்ளீஸ் ...



   விசித்திர நாடு









நாய் மனிதனைக் கடித்து விட்டால்
நஷ்டம் ஒன்றும் நாய்க்கு இல்லை!
மனிதன் நாயைத் துன்பப்படுத்தினால்
மாதக் கணக்கில் சிறைவாசம்!

யானை அப்பாவி மக்களை கொன்றுவிட்டால்
யாதொரு தண்டனையும் யானைக்கு இல்லை!
யானையை யாரேனும் காயப்படுத்தினால்
ஏராள தண்டனை மனிதனுக்குண்டு!

மனிதன் ஒருவன் வழியில் கிடந்தால்
தாண்டிச் செல்லும் இந்த சமுகம்!
நாய் ஒன்று நோய் கொண்டால்
பாய்ந்து வரும் அரசின் வாகனம்!

உலக நாடுகள் அனைத்தும்
உயர்வாக மதிக்கும் மனிதர்களை
கொடிய மிருகங்களுக்கு இரையாக
கொட்டிக் கொடுக்கும் எங்கள் நாடு.


                                                                கவிஞர்
                                                   கவி தென்றல்
                                                      ஆவடி, தமிழ்நாடு

 அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை
வாசித்தப் பின் உங்கள் எண்ணங்களை இங்கே
தூவி விடுங்கள் . நன்றி !






Sunday, February 27, 2011

 அனாதை விடுதி













  





மூத்தவன் டாக்டர் !
அடுத்தவன் டீச்சர் !
மூன்றாவது மகள் இஞ்சினியர் !
கடைசி மகன் வக்கீல் !
நாங்கள் பெற்ற
நான்கு குழந்தைகளும்
நல்ல நிலையில்
ஆனால் ...
ஆதரவின்றி
அனாதை விடுதியில்
நானும் என் மனைவியும் .


                                  கவிஞர்
                கவி  தென்றல்
                         ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Saturday, February 26, 2011

சதிக்கார சாதி






 









அன்று...
விபத்தில் அடிப்பட்டு சாலையில் கிடந்த
உன்னை,
உதிரம் கொடுத்து உயிர் காத்தது
நீ நேசிக்கும் உன் சாதியல்ல!

இந்த ஊருக்கு
அனாதையாக, ஆதரவற்றவனாக
நீ வந்த போது ...
உன்னை ஆதரித்து, அரவணைத்தது
நீ நேசிக்கும் உன் சாதியல்ல!

உன் பெண் டாக்டராகவும்
உன் மகன் இஞ்சினியராகவும்
படித்த கல்லூரி...
நீ நேசிக்கும் உன் சாதிக்காரனுடயது அல்ல!

இன்று...
உன் சாதி தலைவனுக்காக
தீக்குளித்தாயே!
அனாதையான உன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்
துணையாக, பாதுகாப்பாக இருப்பது...
நீ நேசித்த உன் சாதியல்ல!
மக்களின் மனித நேயம் தான்!


கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ் நாடு

இதைப் படித்த அன்பர்களே!
உங்கள் எண்ணங்களை இங்கே தெரிவியுங்கள்...

Thursday, February 17, 2011

நவீன காகம்

    நவீன காகம்

தாகம் கொண்ட காகம் ஒன்று
தண்ணீர் தேடி அலைந்தது .
மூடியில்லா ஜாடி யொன்றை -வீட்டு
முற்றத்தில் இருக்கக் கண்டது .

       ஓடி வந்து அதனருகில்
      ஒய்யாரமாய் நின்றது .
       ஜாடியில் எட்டிப் பார்த்தது -அதன்
       அடியில் நீரைக் கண்டது .

குடிக்க வழி தெரியாமல்
குழம்பி போய் நின்றது .
சுற்றும் முற்றும் பார்த்தது .
சுறுசுறுப்பு அடைந்தது .

        கூல் ட்ரிங்க்ஸ் கடைக்கு சென்றது .
       குடித்துப் போட்ட ஸ்ட்ராவை எடுத்து வந்தது .
       ஜாடி உள்ளேப் போட்டது -தண்ணீரை
       ஜாலியாக உறிஞ்சு குடித்தது .

                                  கவிஞர்
                               கவி தென்றல்
                             ஆவடி , தமிழ்நாடு .

நில்லுங்கள் !கொஞ்சம் நில்லுங்கள் !
சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை சொல்லுங்கள் !

ஏமாற்றாதே ! ஏமாறாதே !



 ஏமாற்றாதே !  ஏமாறாதே !

மொபட்டில் சென்ற காகம்
ஹோட்டல் ஒன்றை கண்டது !
வடை தின்னும் ஆசையில்
ஹோட்டல் முன் நின்றது !


கூட்டமில்லா மேசை ஒன்றை
தேடிப் பிடித்து அமர்ந்தது !
ஓடி வந்த வெய்ட்டரிடம்
இரண்டு வடை பார்சல் என்றது !


பார்சலை கையில் வாங்கிக்கொண்டு
வெளி பாதை நோக்கி நடந்தது !
கையில் ஏதும் பணமில்லை
வெளியே செல்ல வழியில்லை !


முதலாளி அயர்ந்த சமயத்தில்
மொபட்டில் ஏறி பறந்தது !
ஆலமரத்து நிழலைக் கண்டு
மொபட்டை அங்கே நிறுத்தியது


பார்சலை கையில் எடுத்தது !
பவ்வியமாக அதைப் பிரித்தது !
பெட்ரோல் இல்லா ஸ்கூட்டரை
தள்ளி வந்தது நரி !


ஆல மரத்து நிழலிலே
ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டது !
மொபட்டையும் காகத்தையும் நரி கண்டது !
காகத்தை ஏமாற்ற நினைத்தது !


காகம் அண்ணே ! காகம் அண்ணே
பெட்ரோல் பங்க் எவ்வளவு தூரம் அண்ணே ?
நான்கு கிலோமீட்டர் போக வேண்டும்
நரிக்கு காகம் சொன்னது !


கவலைக் கொண்ட முகத்துடன்
காகத்திடம் நரி கேட்டது !
உங்க மொபட்டை எனக்கு தந்தால்
பெட்ரோல் வாங்கி வந்திடுவேன் !


வடை தின்னும் மோகத்தில் காகம்
வண்டி சாவியை தந்தது !
தேங்க்ஸ் சொன்ன நரியும்
மொபட்டில் ஏறி சென்றது !


களவுப் போன ஸ்கூட்டரை
கண்டுப் பிடித்த போலீசார் ,
காகம் அருகில் வந்தனர்
கையில் விலங்கை பூட்டினர் !


இரண்டு வடையை ஏமாற்றிய காகத்திற்கு
இரண்டு வருட கடுங்காவல் ஜெயில் !
ஸ்கூட்டர் திருடிய குற்றத்திற்கு
சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர் !

                         கவிஞர்
                       கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .

என் போன்று வளரும் கவிஞர்களுக்கு
உங்களுடைய கருத்துக்கள்தான் நல்ல உரமாகும் .
நன்றி, நண்பர்களே !

Sunday, February 6, 2011

 நடுத்தர வர்க்கம்


அக் கரையிலும் இல்லாமல்
இக் கரையிலும் இல்லாமல்
நடுக் கடலில் தத்தளிக்கும்
நடுத் தர வர்க்கம் நான்!

சைக்களில் செல்லலாம் என்றால்
மனம் சைக்கோவாக மறுக்கிறது!
காரில் வெளியே செல்ல மனம்
காகித விமானத்தில் பறக்கிறது!

லுங்கியும் கட்ட முடியவில்லை!
கோட், சூட்டும் போட இயலவில்லை!
பேண்ட், சட்டை போட்டுக் கொள்ள
போதுமான வசதியும் இல்லை!

குடிசையில் வசிக்க நினைத்தால்
குரங்கு மனம் கீழேப் பார்க்க மறுக்கிறது!
மாளிகையில் வசிக்க நினைத்தால்
மனம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது!

குடிசையுமில்லை, மாளிகையுமில்லை
குடக்கூலியில் வாழ்க்கை ஓடுது!
சொந்த வீடு கட்டலாம் என்றால்
சொற்ப வருமானத்தில் முடியவில்லை!

படைக்கும் போதே இறைவன்
பாகுபாடுடன் படைத்து விட்டான்!
ஏற்ற இறக்கம் இவ்வுலகில் மாற
ஏதாவது வழியுண்டா, சொல்லுங்களேன்!

                                                   கவிஞர்
                                            கவி தென்றல்
                                         ஆவடி, தமிழ்நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை
வாசித்தப் பின் உங்கள் எண்ணங்களை இங்கே
தூவி விடுங்கள் . நன்றி !
  இருண்ட சுதந்திரம்

சுதந்திர காற்றை சுவாசிக்க
சுற்றித் திரிகின்றனர் நம் மக்கள்!
எப்படியிருக்கும் நம் சுதந்திரம்?
ஏங்கி தவிக்கின்றனர் நம் மக்கள்!

கைக்கட்டி வாய் பொத்தி,
காலமெல்லாம் ஊமையாக
கால் வயிற்றுக் கஞ்சின்றி
கண்ணீர் சிந்துவதுதான் சுதந்திரமா?

அரையில் கட்டிக் கொள்ள ஆடையின்றி
அவமானத்தால் கூனிக்குறுகி
கோமணத்தைக் கட்டிக் கொண்டு
கூழைக் கும்பிடுப் போடுவதுதான் சுதந்திரமா?

பள்ளிப்படிப்பை பணமாக்கியதால்
படிக்கப் பணமின்றி பருவ வயதில்
வாழ வழியின்றி வாடிய இளைஞர்கள்
வழிப்பறிக் கொள்ளையர்களாவதுதான் சுதந்திரமா?

படித்து முடித்து வேலையின்றி
பரிதவிக்கும் பட்டதாரிகள்
தீவிரவாதத்திற்கு உறுதுணையாக
திரண்டு அணிவகுத்து செல்வதுதான் சுதந்திரமா?

இளைஞர்கள் இந்நாட்டின் மன்னர்கள்
வாலிபர்கள் வருங்காலத் தூண்கள்
ஏடுகளில் எழுதிவைத்த வாக்கியங்கள் இது
எதிர்காலத்தில் எடுபடாத உவமைகள் இது!

முதியவர்கள் நாட்டை ஆள்வதால்
முழுசுதந்திரமும் இருண்டு விட்டது.
இளைஞர்கள் ஆள வழிவிடுங்கள்
இருண்ட சுதந்திரம் ஒளி பெறும்.

                            கவிஞர்
                         கவி தென்றல்
                 
                       ஆவடி, தமிழ்நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 


           குடிசை

வளமான நாட்டிலும்
அழியாத கல்வெட்டு

                      கவிஞர்
                 கவி தென்றல்
             ஆவடி, தமிழ்நாடு
             செருப்பு

   உனக்காக உழைக்கும்
   உண்மை ஊழியன் .

              கவிஞர்
            கவி தென்றல்
          ஆவடி , தமிழ்நாடு .
  ஹோட்டல்

அரை வயிறு நிரம்ப
ஒரு நாள் ஊதியம்

              கவிஞர்
            கவி தென்றல்
           ஆவடி, தமிழ்நாடு
           











வறட்சி


உழவனுக்கு உணவு ...
     வயல் எலிகள் !
உழுவதற்கு உதவிய மாடுகள் ...
     உண்ணும் இறைச்சியாய் !
ஏர் கலப்பைகள் ...
     ஏழையின் அடுப்பில் விறகாய்
ஏரி ,  குளங்கள் ...
     கட்டணமில்லா கழிப்பிடம் !
அணைக்கட்டுகள் ...
     அரை நிர்வாணம் !

                                   கவிஞர்
                        கவி  தென்றல்
                            ஆவடி , தமிழ்நாடு .


  அனாதை

உன்னை ...
பெண் கேட்டு வந்த போது ,
என் பெற்றோர் கேட்ட
சீர் , வரதட்சனை ,
உன் பெற்றோரின் இயலாமை ,
நடந்ததை நினைத்தால் ...
நடக்காது நம் திருமணம் !
கண்ணே ...
கவலைப் படதே !
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
அதிலே பிறந்திடுவோம்
அனாதைகளாக !

                     கவிஞர்
             கவி  தென்றல்
                ஆவடி , தமிழ்நாடு .
                  யோகி

பாசமென்னும் பானைதனை
பந்தலிலே அமைத்திட்டான்!
நேசமெனும் குளிர் நீரினை
அப் பானைதனில்  நிரப்பிட்டான்!

மோசம் செய்ய வருவோர்க்கு -நல்
மோர்தனை அளித்திட்டான்!
ஆசையுடன் வருவோர்க்கு -நல்
ஆசிதனை வழங்கிட்டான்!

                 கவிஞர்
               கவி  தென்றல்
              ஆவடி, தமிழ் நாடு.
  பூமித் தாய்

பூமித் தாய்
பொறுமை உள்ளவள் தான் !
அவள் அசைந்தால் ...
பூகம்பம் !
கையசைத்தால்...
புயல் !
கண்ணீர் சிந்தினால் ...
வெள்ளம் !
தாகம் கொண்டால் ...
வறட்சி !
கோபம் கொண்டால் ...
எரிமலை !
மகிழ்ச்சிக் கொண்டால் ...
செழிப்பு !

                   கவிஞர்
                 கவி  தென்றல்
               ஆவடி , தமிழ்நாடு .

நில்லுங்கள் !கொஞ்சம் நில்லுங்கள் !
சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை சொல்லுங்கள் !
சிகரெட்



புற்று நோய் வேண்டுமா ?
     புறப்பட்டு வாருங்கள் !
மாரடைப்பு வேண்டுமா ?
     விரைந்து வாருங்கள் !
மூச்சிரைப்பு வேண்டுமா ?
     முன்னேறி வாருங்கள் !
பசியின்மை , காசநோய்க்கு
     படியேறி வாருங்கள் !
அடுத்தவருக்கு நோய் பரவ
     ஆவலாய் வாருங்கள் !
அற்ப ஆயுள் வேண்டுமா ?
     அருகில் வாருங்கள் !
என்னைப் பற்ற வையுங்கள்
     எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள் !

                                                கவிஞர்
                                  கவி  தென்றல்
                                      ஆவடி , தமிழ்நாடு .

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 


Saturday, February 5, 2011

பேருந்தில்

                 
                   
 ரகு நடத்துனர் விசில் ஊதியும் ஓட்டுனர்
       பேருந்தை நிறுத்தலையே ஏன்?


பாபு:  புது ஓட்டுனராம்... ப்ரேக் எங்கே
           இருக்குன்னு தெரியலையாம்.


                                                            கவிஞர்
                                             கவி தென்றல்
                                                   ஆவடி,  தமிழ்நாடு.
                                       சிரிப்பு





ராஜ் : டேய்  பரிட்சையிலே  பெயிலாட்டியே
      உங்க  அப்பா  திட்டுவார்ன்னு  பயமேயில்லையா ?
பாபு : இல்லடா .
ராஜ் : ஏண்டா ?
பாபு : எருமமாட்டிற்கு படிப்பு  வராதுன்னு
      எங்கப்பா  சொல்லிட்டாரு .

                                                             கவிஞர்
                                                        கவி  தென்றல்
                                                    ஆவடி , தமிழ்நாடு .                               
  அக்காப்பொண்ணு      

அக்காப்பொண்ணு ரத்தினமே !
அழகு பொன் சித்திரமே !
துள்ளியோடும் புள்ளிமானே  -தை
மாதத்தில் மணக்கப் போறேன் நானே !

மலையருவியில் குளிக்கும் போது ,
மறந்துப்போன வெட்கமே !
மணமுடித்து பள்ளியறையில்
வந்திடும் என் பக்கமே !

பாரிஜாதப் பூவைக் கொண்டு
மாலை ஒன்று கோர்க்கவா !
அழகு கொண்ட உந்தன் கழுத்தில்
அணிகலனாய் சேர்க்கவா !

பாலும் பழமும் பள்ளியறையில்
நிறையத்தானே  இருக்கு !
அதுக்கு மேலே ஆசை கனவுகள் உன்
அத்தானிடம் இருக்கு !

                   கவிஞர்
                   கவி  தென்றல்
                   ஆவடி , தமிழ்நாடு .
  ஆண்டவரின்  வருகை ! 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
கர்த்தரிடத்தில் ஓடி வாருங்கள் !
பாரத்தின் களைப்பைப் போக்கி
உனக்கு பரவசம் அளிப்பாரே !

எல்லையில்லா வல்லமை உள்ளவரே -எங்கள்
  தொல்லை எல்லாம் நீக்க வந்தவரே !
சொல்லிலடங்கா அற்புதம் செய்து
எங்களை ஆட் கொண்டவரே

உந்தன் சாயலில் எங்களை படைத்தீரே !
உலகை படைத்து எமக்கு அளித்தீரே !
எந்தன் பாவத்தைப் போக்க
உந்தன் ஜீவனை விட்டீரே !

வாழ்வளித்த ஆண்டவர் வருகை
எந்த நாள் வருமோ ?
அந்த நாளை எந்தன் ஆத்மா
அதி ஆவலாய் தேடுதே !

                    கவிஞர்
                    கவி  தென்றல்
                    ஆவடி, தமிழ்நாடு

ஆண்டவா ! இனி ஒரு போதும் வேண்டாம்

ஆண்டவா ! இனி ஒரு போதும் வேண்டாம்

கும்பகோணம் நகரினிலே
கூக்குரல் கேட்குதே !
அய்யகோ என மார்பில்
அடித்துக் கொள்ளும் பெற்றோர்கள் !

குறுகிய வழி தெருவுக்குள்ளே
குடியிருக்கும் பள்ளியது !
கல்வி கற்க சென்ற மழலைகளை
காவு கொண்ட பள்ளியது !

எண்ணில்லா அரும்புகளை
எரித்து விட்ட பள்ளியது !
குறுகிய சாலை எங்கும்
குழுமி நிற்கும் பெற்றோர்கள் !

உலகத்தை கதற வைத்த
உருக்கமான சம்பவம் !
கரிகட்டையான குழந்தைகளை
கையிலேந்தும் தாய்மார்கள் !

தான் பெற்ற பிள்ளை இதுதானா?
தேடிப்பார்க்கும் பெற்றோர்கள் !
பள்ளியின் மாடியிலே
பாவம் மழலை சடலங்கள் !

அங்கும் இங்கும் கிடக்குதே
அரும்புகள் பல கரி கட்டைகளாக!
உயிருக்குப் போராடிய குழந்தைகளுக்கு
உதவிய மனித நேயங்கள் !

பெற்றவர் , மற்றவர் பேதமின்றி
தேம்பி அழும்  மக்கள் கூட்டம் !
மழலையைக் காக்க ஓடி வந்த
மனிதமிகு மருத்துவர்கள் !

மகனின் உடலை தேடித் தேடி
மயக்க முற்ற பெற்றோர்கள் !
இறந்து கிடந்த குழந்தைகளை
இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ,
ஊரே ஊர்வலமாக
ஊர்ந்து சென்ற பரிதாபம் !

கோடான கோடி மக்கள்
கோயில்களில் அர்ச்சனை !
அகிலஉலக மக்கள்
ஆலயங்களில் பிராத்தனை !

பல கோடி மக்கள்
பள்ளிவாசலில் தொழுகை !
பல லட்ச பள்ளிபாலகர்களின்
பள்ளிக்கூட அனுதாபங்கள் !

ஆண்டவா ...
இனி ஒரு போதும் வேண்டாம்
இது போன்ற கோர செயல்

                     கவிஞர்
                    கவி  தென்றல்
                  ஆவடி , தமிழ்நாடு .

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !