welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, March 20, 2011

    உன்னை பாராட்ட
 

  அன்பினால் உலகை வெல்!
ஆணவத்தை விட்டொழி !
இன்முகம் காட்டு !
ஈகையை மறவாதே !
உண்மையைப் பேசு !
ஊரோடு ஒன்றி வாழ் !
எதிரியை நண்பனாக்கு !
ஏற்றத்தாழ்வை தவிர் !
ஐக்கியத்தை நாடு !
ஒற்றுமையை வளர் !
ஓகோவென உனை பாராட்ட
ஔவை வழியை பின்பற்றி
அஃதே போல் நீ வாழ் !                                கவிஞர்
                 கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .


கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, March 18, 2011

    முதல் நோயாளி

 
நோயாளி : ஏன்  டாக்டர்  அழுவுறிங்க?
டாக்டர் :      நான்  கிளினிக்  வச்ச  அஞ்சு  வருஷத்திலே
                        வந்த  முதல்  பேஷன்ட் நீ  தான் .
                         அதான்  ஆனந்த  கண்ணீர்  வடிச்சேன் .

                                                                               கவிஞர்
                                                               
  கவி  தென்றல்
                                                                    ஆவடி , தமிழ்நாடு
.
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!  அற்புத ஆண்டவர்   நிலையற்ற உலகில் ஆயிரம் இருந்தும்
      மன நிம்மதியில்லை !
நீ ஆண்டவரையே அண்டியிருந்தால்
      அதிகத் தொல்லையில்லை !

ஆலயம் சென்று ஆண்டவரையே
      துதித்துப் பாடிவிடு !
பலைவனமாகிய உந்தன் வாழ்க்கை
      நல் சோலை வனமாகும் !

கல்வாரி மலையில் நம் பாவங்கள் போக்க
      தம் உயிரை நீத்தாரே !
இஸ்ரவேலுக்காக செங்கடலை
      இரண்டாய் பிரித்தாரே !

குருடு , செவிடு , ஊமை , குஷ்டம்
      குறைப் போக்கினாரே !
நம்பிக்கையுள்ள மார்த்தாளின் சகோதரனுக்கு
      உயிரைக் கொடுத்தாரே !

                                                                                 கவிஞர்
                                                                   கவி  தென்றல்
                                                                      ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Tuesday, March 15, 2011

     
நெருப்பு


 


உணவு சமைக்கும் மாந்தர்க்கு
உற்றத் துணையாய் இருந்திடுவாய்!
உலக ஆற்றல், அழிவு செயல்களுக்கு
உதவிகள் பலவும் செய்திடுவாய்!

இல்லத்தரசியின் சமையல் அறையில்
இணைப்பிரியா தோழியாய் இருந்திடுவாய்!
வரதட்சணையின் கொடுமைக்கு
வாலிபபெண்ணை பலிக் கொடுப்பாய்!

இருளில் செல்லும் மனிதருக்கு
ஒளி விளக்காய் இருந்திடுவாய்!
வானில் செல்லும் விண்கலத்திற்கு
வழித் துணையாய் சென்றிடுவாய்!

தீவிரவாத சக்திகளுக்கு
தீனியாக இருந்திடுவாய்!
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விளக்காய் எரிந்திடுவாய்!

நல்ல செய்கை அனைத்திற்கும்
நண்பனாக இருந்திடுவாய்!
தெய்வதிரு சன்னதியில்
தீப ஒளியாய் மிளிர்ந்திடுவாய்!

ஆக்கத் தொழில் அனைத்திற்கும்
ஊக்கம் பல கொடுத்திடுவாய்!
மக்காப் பொருளை அழித்து
மண்ணோடு கலக்க செய்திடுவாய்!

நல்லவர் உன்னை நாடி வந்தால்
நன்மைகள் பல செய்திடுவாய்!
புல்லர்கள் உன்னை தேடிவந்தால்
பூமியில் அவர்களை அழித்திடுவாய்!

எல்லாம் அறிந்த மனிதர் நாம்
நல்ல நெருப்பை வணங்கிடுவோம்!
சொல்லாவண்ணம் துயரங்களை
இல்லாவண்ணம் செய்திடுவோம்!                                                                 கவிஞர்
                                                      கவி  தென்றல்
                                                          ஆவடி, தமிழ் நாடு. இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
 பாதுகாப்பு

பாதுகாப்பு கடலில் நீந்தி
பார்வையாளர் உங்களை நாடி
உறவாட வந்துள்ள எனக்கு
உற்சாக வரவேற்பு தாரீர் !

உண்ண உணவு வேண்டும் !
உடுக்க உடை வேண்டும் !
உறங்க ஓர் இடமும் வேண்டும் !
உறுதுணையாய் பாதுகாப்பு வேண்டும் !

உண்ண உணவு எதற்கு ?
உயிர் வாழவும் , உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமா ?
கத்திரிக்காய் , கருவாடு உடம்புக்கு சூடு .
கண்டபடி உண்டாலோ வந்திடுமே கேடு !

வெண்டைக்காய் , வெண்ணை உடலுக்கு குளிர்ச்சி !
வெகுவாக உண்டாலோ மனதிற்கு தளர்ச்சி !
உண்ணும் உணவை யெல்லாம்
உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பதெல்லாம் எதற்கு ?
ஓடியாடி உழைத்திடும் நமக்கு
பாதுகாப்பு கிடைத்திடுமே அதற்கு !

உடுக்க உடை எதற்கு -நம்
உடலை மூடி அழகு படுத்தவா ?
பல்கிட்டும் பனிக் காற்றில்
பருத்தி ஆடை அணிவாயோ ?
கடுமையான கோடை வெய்யிலில்
கம்பளி ஆடைதான் அணிவாயோ ?

காலத்திற் கேற்ற ஆடையை -நாம்
கருத்தாய் தேர்ந் தெடுத்து
அணிந்துக் கொள்வது எதற்கு ?
அதுவும் நம் பாதுகாப்புக்கு !

உறங்க ஓர் இடம் வேண்டுமென்றால்
பரந்த உலகில் இடமா யில்லை?
வீதியிலே உறங்கலாமே -பின்
வீடு எதற்கு , சொத்து எதற்கு ?
குளிர் வெப்பம் கொள்ளைப் போன்ற
கொடுமையிலிருந்து நம்மை பாதுகாக்க !

  தாயின் கருவறையிலிருந்து -நம்
வாழ்நாள் கடைசி மட்டும்
ஒவ்வொரு அசைவிலும் ,
வெளிவிடும் மூச்சிலும்
ஒருங்கிணைந்து வருவதுதான் பாதுகாப்பு !


எங்கும் எதிலும் பாதுகாப்பு
என உணர்ந்தால் ஏதுமில்லை இழப்பு
என வாய்ப்பளித்த உங்களிடமிருந்தும் ,
பாசமிகு நண்பர்களிடமிருந்தும் ,
பாதுகாப்புடன் விடை பெறுகிறேன் வணக்கம் !

                                            கவிஞர்
                             கவி  தென்றல்
                                 ஆவடி , தமிழ்நாடு .

நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..


Saturday, March 12, 2011

 சிறந்து வாழ்வோம்!

  தீமை யார்க்கும் செய்திட்டால்...
  திரும்ப உனைவந்து சேர்ந்து விடும்!
  நன்மை பிறருக்கு செய்திட்டால்...
  நாளை உன்னை அதுகாக்கும்!

  பெற்றோரை மதிக்க மறந்திட்டால்...
  மற்றவர் உனை இகழ்ந்திடுவர்!
  உற்றார் உறவினரை நேசித்தால்...
  உரியக் காலத்தில் துணையாவர்!

  கூட நட்பைத் தேடிச் சென்றால்...
  கோடி துன்பம் நாடி வரும்!
  வருத்தப்பட்டு மனம் நொந்தால்...
  வாழ்வதில் உனக்கு பலனில்லை!

  பதறியாற்றும் செய்கை யெல்லாம்...
  முடிவில் சிதறிதானே போய்விடும்!
  ஏற்றத்தாழ்வை எதிர்த்திட்டால்...
  ஏழ்மையை உலகில் தவிர்த்திடலாம்!

  கல்வியை அனைவரும் கற்றிட்டால்...
  கல்லாமையை இல்லா செய்திடலாம்!
  வாழும் உலகில் பகை வேண்டாம்...
  வாழ்வோம் நாம் நண்பர்களாய்!

  முயற்சி உன்னை மனிதனாக்கும்...
  முயன்றால் உனக்கு தோல்வியில்லை!
  செய்யும் தொழிலே தெய்வமென...
  சிறந்து வாழ்வோம் இப்புவிதனிலே!

                                                          கவிஞர்
                                              கவி  தென்றல்
                                                  ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
       பாடுகள்

கல்வாரி மலை மேலே எந்தன்
     கர்த்தர் நின்றாரே !
மரசிலுவையின் மேலே அவர்
     மரண எல்லையில் நின்றாரே !

முடிசூடா எந்தன் இயேசுவின் சிரசில்
     முள்முடி வைத்தனரே !பிரம்பால்
மூர்க்கமாய் அடித்தனரே !

கருணை நிறைந்த கர்த்தரின் முகத்தில்
     காரி உமிழ்ந்தனரே !தோல்
வாரினால் அடித்தனரே !

இரக்கம் கொண்ட ஆண்டவர் கை கால்களில்
     இரும்பு ஆணியை அடித்தனரே ! குடிக்க
கசப்புக் காடியை கொடுத்தனரே !

பிதாவே இவர்களை மன்னியும் என்று
     பிராத்தனை செய்தாரே !சாந்த
சொருபமாய் நின்றாரே !

என்னை நினைத்தருளும் என்ற கள்வனுக்கு
     பரலோகத்தில் இடமளித்தாரே !அவன்
பாவத்தை மன்னித்தாரே !

என் தேவனே எனை ஏன் கைவிட்டீரென
     ஏக்கமாய் அழைத்தாரே !தன்
ஜீவனை விட்டாரே !
                          
                                     கவிஞர்
                       கவி  தென்றல்
                           ஆவடி , தமிழ்நாடு .நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..


 காதலின் வலிமை

இளைய சமுதாயமே ...
காதலை வெறுக்காதீர்கள் .
வாழ்த்துங்கள் !
பெற்றோர்களே ...
இளசுகளின் காதலுக்கு
வழி விடுங்கள் !
சாதி , மதம் என்ற
தடைக்கற்களை ,
உடைக்கும் வலிமை
காதலுக்கு மட்டுமே உண்டு !

                                             கவிஞர்
                                      கவி  தென்றல்
                                  ஆவடி , தமிழ்நாடு .நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..

Thursday, March 10, 2011

 இறப்பிலும் கதறல்

 என் ...
இரு  கால் பாதங்களுக்கிடையில்
உன் முகம் புதைத்து
நீ கதறி அழுதபோது ,
துக்கத்தால் என் மனம் தவித்தது !
உள்ளுக்குள் நான் அழுகிறேன் .
கண்களில் கண்ணீர் வரவில்லை !

என் ...
நெஞ்சில் விழுந்து
நெடுநேரம் புரண்டு அழும்
நம் அருமை மகள் !
எழுந்து ,
அவளைத் தேற்ற முயல்கிறேன் .
என் உடல் ,
ஒத்துழைக்க மறுக்கிறது !

நம் ...
காதல் திருமணத்திற்கு கூட
வராத உன் தந்தை ,
இன்று வந்திருக்கார் .
என் அருகிலேயே நிற்கிறார் !
அவருக்கு ,
நன்றி சொல்ல முனைகிறேன்.
முடியவில்லை !

கண்டும் காணாது இருக்கும்
நம்...
உறவினர்களும் , தெருவாசிகளும்
என்னை சுற்றி
வலம் வருகின்றனர் !
மகிழ்ச்சியில்
என் மனம் திளைக்கிறது !
சிரிக்க நினைக்கிறேன் .
ஏனோ
வாய் திறக்க இயலவில்லை !

எனது ஊர்வலத்தில் ...
வான வேடிக்கைகளும் , மாலையும் ,பூக்களும்
சாலை முழுவதும் .
என்னை சுமந்த நால்வரில்
நம்
அருமை மகனும் ஒருவன் !
நான் அவனை
முழுவதும் பார்க்க முடியவில்லை .
என் மகனின் முகத்தை
காண மாட்டேனா என்ற
ஏக்கம் ,பரிதவிப்பு !

குழியினுள் என்னை படுக்க வைத்ததும்
என் மனம் ,
மகனைக்  காணத் துடித்தது !
கடைசியில் ...
ஒரு பிடி மண்ணை
என் மீது போடும் போது ,
என்  மகனின் முகத்தை
ஆசைத்தீர கண்ட சந்தோஷத்துடன்
என் ஆவி ,
என்னை விட்டுப் பிரிந்தது !

                                          கவிஞர்
                             கவி தென்றல்
                                 ஆவடி , தமிழ் நாடு .நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..

Monday, March 7, 2011

      வறட்சி
 

 


உழவனுக்கு உணவு ...
     வயல் எலிகள் !
உழுவதற்கு உதவிய மாடுகள் ...
     உண்ணும் இறைச்சியாய் !
ஏர் கலப்பைகள் ...
     ஏழையின் அடுப்பில் விறகாய்
ஏரி ,  குளங்கள் ...
     கட்டணமில்லா கழிப்பிடம் !
அணைக்கட்டுகள் ...
     அரை நிர்வாணம் !
                                    கவிஞர்

                       கவி  தென்றல்
                           ஆவடி , தமிழ்நாடு .
அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றி

Sunday, March 6, 2011

      சுய நலம்
 

 

கருப்பு மேகம் தான்
கன மழைத் தரும் !
பெண்ணே ...
நீயும் கருப்புதான் !
கை நிறைய சம்பாதிக்கிறாய் !
வேலையில்லா பட்டதாரி நான்
உன்னை ...
விரட்டி விரட்டி காதலிக்கிறேன் !
காரணம் ...
நீ கருப்பு என்பதால் அல்ல ,
கை நிறைய சம்பாதிப்பதால் !

                                 கவிஞர்
                  கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .


அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றி

Tuesday, March 1, 2011

இந்த காலமும் அந்த காலமும்

இந்த காலமும்                அந்த காலமும்

 
              நிலாவைக் காட்டி
     சோறு ஊட்டியது
அந்த காலம் !
நிலாவில் மனிதன்
     கால் ஊன்றியது
இந்த காலம் !

அன்ன சத்திரங்கள்
     ஆயிரம் கட்டியது
அந்த காலம் !
அதை வாடகைக்கு விட்டு
     பணமாக்குவது
இந்தக்காலம் !

நீருக்காக ஏரி , குளம்
     வெட்டி வைத்தது
அந்தகாலம் !
அதை மூடி ஏழடுக்கு
     மாளிகை கட்டியது
இந்த காலம் !

நிழலுக்காக சாலையில்
     மரங்களை நட்டது
அந்த காலம் !
மரங்களை வெட்டி
     காசாக்குவது
இந்த காலம் !

பணமின்றி படிக்க
     பள்ளி சென்றது
அந்த காலம் !
பள்ளிப் படிப்பை
     பணமாக ஆக்குவது
இந்த காலம் !

கள்ளர்கள் நல்லவர்களாக
     மாறியது
அந்த காலம் !
நல்லவரும் வழிப்பறி
     கள்ளர் ஆனது
இந்த காலம் !

நள்ளிரவில் பெண் தனியே
     நடந்து சென்றது
அந்த காலம் !
பட்ட பகலில் பெண்
     வீட்டில் இருக்க பயப்படுவது
இந்த காலம் !

ஒரே கூட்டமாய்
     கூடி வாழ்ந்தது
அந்த காலம் !
சாதி , மதத்தால்
     சண்டையிட்டு பிரிந்தது
இந்த காலம் !

தாகத்தைத் தீர்க்க
     தண்ணீர் பந்தல் வைத்தது
அந்த காலம் !
தண்ணீரை விற்று
     காசாக்குவது
இந்த காலம் !

கேள்விக் கேட்டால்
     நீதி கிடைத்தது
அந்த காலம் !
கேள்விக் கேட்டாலே
     சிறையில் அடைப்பது
இந்த காலம் !

இந்த காலம் என்று
     ஒழியுமோ ?
அந்த காலம் என்று
     வருமோ ?

     
                          
                               கவிஞர்
                 கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு
.
    
அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றிமனோதத்துவம்


குடி குடியைக் கெடுக்கும்
உண்மைதான் !
அதை படித்ததும் ...
குடிக்கத் தோன்றுகிறதே !

  
புகைப்பிடிப்பது உடம்புக்கு தீங்கானது
மறுக்கவில்லை !
வாசகத்தை படித்ததும் ...
புகைப் பிடிக்க தூண்டுகிறேதே !
  
புகையிலை மெல்லுவது உடம்புக்கு தீங்கு
புரிகிறது !
படித்ததும் ...
புகையிலை போட மனம் தாவுகிறேதே !

  
போதைப் பாக்கு புற்று நோய் தரும்
தெரியும் !
பாக்கெட்டை பார்த்ததும் ...
வாய் பரப்பரக்குதே !
 

ஏட்டிக்குப் போட்டி செய்யும்
ஏடாக்கூடமனிதனின்
மனோதத்துவத்தை மனதில் கொண்டு ...
மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் !
அதில் ,
மயங்கி ஏமாறும் மக்கள் !


                                                        கவிஞர்
                                           கவி  தென்றல்
                                                ஆவடி , தமிழ்நாடு .


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.