தாலாட்டு
சிப்பியிலிருந்து பிறந்த நல்முத்தே -நீ
சிறப்புடன் வாழவேண்டும் என் சொத்தே !
பாலுட்டி வளர்த்திடுவேன் நான் அன்போடு !
சீராட்டி வளரவேண்டும் நல்பண்போடு !
மழலை மொழி பேசி மயக்கிடுவாய் -எங்களை
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திடுவாய் !
பள்ளியில் நீயும் படித்திடுவாய் -படிப்பில்
பள்ளியில் முதல்வனாய் வந்திடுவாய் !
தேனீக்கள் போலவே உழைத்திடுவாய் -நீயும்
தேனாய் எல்லோருக்கும் இனித்திடுவாய் !
குடும்ப பாரம் உனக்கில்லை -எந்த
குறையும் உனக்கு இங்கில்லை !
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் -உன்னை
வளர்ப்பதே எங்கள் பொது எண்ணம் !
எதிர்காலத்தில் இந்நாட்டின் மன்னன்
நிச்சயம் நீ ஆவாய் இது திண்ணம் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
எதிர்கால மன்னனுக்கு அற்புதமான தாலாட்டு. வாழ்த்துக்கள்.
ReplyDelete