கரண்டியும் எலுமிச்சைப் பழமும்
ஆளுக்கொரு கரண்டியிலே
அழகானதொரு எலுமிச்சை !
ஆர்வம் கொண்ட உங்களுக்கு
நாங்கள் தரும் பரீட்சை !
கரண்டியை வாயில் கவ்விக் கொண்டு
கருத்தாய் நீங்கள் நடக்கலாம் !
பழம் நழுவி கீழே விழுந்தால்
பரிசு பெறாமல் போகலாம் !
வேகமாக அடியெடுத்து
விவேகமாய் செல்லலாம் !
வெற்றி இலக்கை சென்றடைந்தால்
பரிசுப் பெற்று செல்லலாம் !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
வேகமாக அடியெடுத்து
ReplyDeleteவிவேகமாய் செல்லலாம் !//
வாழ்க்கைத்தத்துவத்தின் ஆதார விவேகம் கற்றுத்தரும் அருமையான பயிற்சி அல்லவா போட்டியின் வடிவில்!
அற்புதமான கவிதைக்குப் பாராட்டுக்கள்.