welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

ஒரே குலம்! ஒரே இனம்!

அந்தி சாயும் வேளையிலே - அந்த சோலையில்
ஆயிரம் குரல் கேட்குமே - அந்த வேலையில்
உவகையுடன் ஓடி சென்ற - எந்தன் காதிலே
உறுதியாக-ஒலித்ததுவே அந்த கானங்கள்!u

மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாருங்கள்!

ஆண்டவனின் படைப்பினிலே நாங்கள் ஓரினம்
அதுபோல நீங்களும் ஓரினமே!
காகம் முதல் கழுகுவரை பல இனங்கள்
காட்டில் வாழும் பறவைகளோ பல இனங்கள்!

எத்தனையோ இனங்களுண்டு எங்களிடத்தில்
ஏற்றத்தாழ்வு இல்லையே எங்களிடத்தில்!
ஒன்று முதல் நான்கறிவு எங்களுக்குண்டு
ஒற்றுமையும் எங்களது கூட்டத்திலுண்டு!

உயர்ந்தறிவாம் பகுத்தறிவு உங்களுக்குண்டு
உங்களிடத்தில் பலஜாதி பேதமும் உண்டு!
மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாழுங்கள்!

பல இனங்கள், பல மொழிகள், பல ஜாதிகள்
பரந்து கிடக்கும் நம் பாரத நாட்டில்
ஒற்றுமையாய் வாழ்வோமென குரல் கொடுங்கள்!
ஒரே குலம் ஒரே இனமென சிந்து பாடுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment