காகம் இரையை கண்டுவிட்டால்
கத்திக் கூப்பிடும் தன் இனத்தை !
கூட்டத்தில் ஒன்று இறந்திட்டால்
கூவியே சேர்த்திடும் பெரும் கூட்டத்தை !
எறும்பு உணவை பார்த்து விட்டால்
இழுத்துவரும் தன் கூட்டத்தை !
எறும்பு ஒன்று இறந்திட்டால்
ஏந்தி செல்லுமே சோகத்தால் !
பாதையில் ஒருவருக்கு விபத்தென்றால்
பயந்து ஒதுங்குகிறோம் நாமெல்லாம் !
அடுத்த வீட்டில் தீ யென்றால்
அலச்சியம் செய்கிறோம் நாமெல்லாம் !
குறைந்த அறிவு ஜீவனெல்லாம்
கூடி வாழ்வதை பார்த்தோமே !
ஆறறிவு மனிதன் நாமெல்லாம்
அவைகளை போல வாழ்வோமே !
கவிஞர்
கவி தென்றல்
ஆவடி , தமிழ்நாடு .
நல்லா இருக்கு சார்! தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete