welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Wednesday, December 1, 2010

கவிஞனின் கதறல்

என்னே கவிஞன்? இவனென
     நகைக்க செய் தோர் பலர்!
இவனல்லவா கவிஞனென
     வியக்க செய் தோர் பலர்!
இயற்கை கவிஞர் நானென
     இயம்பிய இவன்
இயற்றினான் கவிதைகளை
     இயல்பாக சில
தூற்றியதை தன்
     ஏற்றமாக எண்ணியவன்,
துடிப்புடன் பன்
     கவிதைகளை பண்ணியவன்
சோக நாதங்களை சுவையுடன்
     அதில் பண்ணியவன்,
முகத்தில் வழிந்தது
     அவனது அவமான கண்ணீர்.

பசியைப் போக்க கவிதை
     பண்ணுவோர் பலர்!
பணம் சேர்க்க பாடல்
     செய்வோர் பலர்!
புகழ் சேர்க்க செய்யுள்
     புனைவோர் பலர்! - என் போல்
இகழ் சேர்க்க கவிதை
     இயற்றுவோர் சிலர்
இயற்கை கவிஞனோ?
     செயற்கை கவிஞனோ?
யான் அறியேன்!
     பொய்யும் மெய்யும் கலந்து
புனைவதற்கும் யான் அறியேன்
     அகத்திரையில் அலைக் கழிக்கும்
அக்கற்பனையைக் கொண்டு
     புறத் திரையில் புகழ் மணக்கும்
புதுக் கவிதைகளைப் புனைந்திடுவேன் யான்!


                                                                               கவிஞர்
                                            கவி  தென்றல்
                                                                ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment