welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011

  இருண்ட சுதந்திரம்

சுதந்திர காற்றை சுவாசிக்க
சுற்றித் திரிகின்றனர் நம் மக்கள்!
எப்படியிருக்கும் நம் சுதந்திரம்?
ஏங்கி தவிக்கின்றனர் நம் மக்கள்!

கைக்கட்டி வாய் பொத்தி,
காலமெல்லாம் ஊமையாக
கால் வயிற்றுக் கஞ்சின்றி
கண்ணீர் சிந்துவதுதான் சுதந்திரமா?

அரையில் கட்டிக் கொள்ள ஆடையின்றி
அவமானத்தால் கூனிக்குறுகி
கோமணத்தைக் கட்டிக் கொண்டு
கூழைக் கும்பிடுப் போடுவதுதான் சுதந்திரமா?

பள்ளிப்படிப்பை பணமாக்கியதால்
படிக்கப் பணமின்றி பருவ வயதில்
வாழ வழியின்றி வாடிய இளைஞர்கள்
வழிப்பறிக் கொள்ளையர்களாவதுதான் சுதந்திரமா?

படித்து முடித்து வேலையின்றி
பரிதவிக்கும் பட்டதாரிகள்
தீவிரவாதத்திற்கு உறுதுணையாக
திரண்டு அணிவகுத்து செல்வதுதான் சுதந்திரமா?

இளைஞர்கள் இந்நாட்டின் மன்னர்கள்
வாலிபர்கள் வருங்காலத் தூண்கள்
ஏடுகளில் எழுதிவைத்த வாக்கியங்கள் இது
எதிர்காலத்தில் எடுபடாத உவமைகள் இது!

முதியவர்கள் நாட்டை ஆள்வதால்
முழுசுதந்திரமும் இருண்டு விட்டது.
இளைஞர்கள் ஆள வழிவிடுங்கள்
இருண்ட சுதந்திரம் ஒளி பெறும்.

                            கவிஞர்
                         கவி தென்றல்
                 
                       ஆவடி, தமிழ்நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 


No comments:

Post a Comment