welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, February 5, 2011

ஆண்டவா ! இனி ஒரு போதும் வேண்டாம்

ஆண்டவா ! இனி ஒரு போதும் வேண்டாம்

கும்பகோணம் நகரினிலே
கூக்குரல் கேட்குதே !
அய்யகோ என மார்பில்
அடித்துக் கொள்ளும் பெற்றோர்கள் !

குறுகிய வழி தெருவுக்குள்ளே
குடியிருக்கும் பள்ளியது !
கல்வி கற்க சென்ற மழலைகளை
காவு கொண்ட பள்ளியது !

எண்ணில்லா அரும்புகளை
எரித்து விட்ட பள்ளியது !
குறுகிய சாலை எங்கும்
குழுமி நிற்கும் பெற்றோர்கள் !

உலகத்தை கதற வைத்த
உருக்கமான சம்பவம் !
கரிகட்டையான குழந்தைகளை
கையிலேந்தும் தாய்மார்கள் !

தான் பெற்ற பிள்ளை இதுதானா?
தேடிப்பார்க்கும் பெற்றோர்கள் !
பள்ளியின் மாடியிலே
பாவம் மழலை சடலங்கள் !

அங்கும் இங்கும் கிடக்குதே
அரும்புகள் பல கரி கட்டைகளாக!
உயிருக்குப் போராடிய குழந்தைகளுக்கு
உதவிய மனித நேயங்கள் !

பெற்றவர் , மற்றவர் பேதமின்றி
தேம்பி அழும்  மக்கள் கூட்டம் !
மழலையைக் காக்க ஓடி வந்த
மனிதமிகு மருத்துவர்கள் !

மகனின் உடலை தேடித் தேடி
மயக்க முற்ற பெற்றோர்கள் !
இறந்து கிடந்த குழந்தைகளை
இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ,
ஊரே ஊர்வலமாக
ஊர்ந்து சென்ற பரிதாபம் !

கோடான கோடி மக்கள்
கோயில்களில் அர்ச்சனை !
அகிலஉலக மக்கள்
ஆலயங்களில் பிராத்தனை !

பல கோடி மக்கள்
பள்ளிவாசலில் தொழுகை !
பல லட்ச பள்ளிபாலகர்களின்
பள்ளிக்கூட அனுதாபங்கள் !

ஆண்டவா ...
இனி ஒரு போதும் வேண்டாம்
இது போன்ற கோர செயல்

                     கவிஞர்
                    கவி  தென்றல்
                  ஆவடி , தமிழ்நாடு .

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 





No comments:

Post a Comment