welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, February 17, 2011

ஏமாற்றாதே ! ஏமாறாதே !



 ஏமாற்றாதே !  ஏமாறாதே !

மொபட்டில் சென்ற காகம்
ஹோட்டல் ஒன்றை கண்டது !
வடை தின்னும் ஆசையில்
ஹோட்டல் முன் நின்றது !


கூட்டமில்லா மேசை ஒன்றை
தேடிப் பிடித்து அமர்ந்தது !
ஓடி வந்த வெய்ட்டரிடம்
இரண்டு வடை பார்சல் என்றது !


பார்சலை கையில் வாங்கிக்கொண்டு
வெளி பாதை நோக்கி நடந்தது !
கையில் ஏதும் பணமில்லை
வெளியே செல்ல வழியில்லை !


முதலாளி அயர்ந்த சமயத்தில்
மொபட்டில் ஏறி பறந்தது !
ஆலமரத்து நிழலைக் கண்டு
மொபட்டை அங்கே நிறுத்தியது


பார்சலை கையில் எடுத்தது !
பவ்வியமாக அதைப் பிரித்தது !
பெட்ரோல் இல்லா ஸ்கூட்டரை
தள்ளி வந்தது நரி !


ஆல மரத்து நிழலிலே
ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டது !
மொபட்டையும் காகத்தையும் நரி கண்டது !
காகத்தை ஏமாற்ற நினைத்தது !


காகம் அண்ணே ! காகம் அண்ணே
பெட்ரோல் பங்க் எவ்வளவு தூரம் அண்ணே ?
நான்கு கிலோமீட்டர் போக வேண்டும்
நரிக்கு காகம் சொன்னது !


கவலைக் கொண்ட முகத்துடன்
காகத்திடம் நரி கேட்டது !
உங்க மொபட்டை எனக்கு தந்தால்
பெட்ரோல் வாங்கி வந்திடுவேன் !


வடை தின்னும் மோகத்தில் காகம்
வண்டி சாவியை தந்தது !
தேங்க்ஸ் சொன்ன நரியும்
மொபட்டில் ஏறி சென்றது !


களவுப் போன ஸ்கூட்டரை
கண்டுப் பிடித்த போலீசார் ,
காகம் அருகில் வந்தனர்
கையில் விலங்கை பூட்டினர் !


இரண்டு வடையை ஏமாற்றிய காகத்திற்கு
இரண்டு வருட கடுங்காவல் ஜெயில் !
ஸ்கூட்டர் திருடிய குற்றத்திற்கு
சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர் !

                         கவிஞர்
                       கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .

என் போன்று வளரும் கவிஞர்களுக்கு
உங்களுடைய கருத்துக்கள்தான் நல்ல உரமாகும் .
நன்றி, நண்பர்களே !

No comments:

Post a Comment