welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, February 26, 2011

சதிக்கார சாதி






 









அன்று...
விபத்தில் அடிப்பட்டு சாலையில் கிடந்த
உன்னை,
உதிரம் கொடுத்து உயிர் காத்தது
நீ நேசிக்கும் உன் சாதியல்ல!

இந்த ஊருக்கு
அனாதையாக, ஆதரவற்றவனாக
நீ வந்த போது ...
உன்னை ஆதரித்து, அரவணைத்தது
நீ நேசிக்கும் உன் சாதியல்ல!

உன் பெண் டாக்டராகவும்
உன் மகன் இஞ்சினியராகவும்
படித்த கல்லூரி...
நீ நேசிக்கும் உன் சாதிக்காரனுடயது அல்ல!

இன்று...
உன் சாதி தலைவனுக்காக
தீக்குளித்தாயே!
அனாதையான உன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்
துணையாக, பாதுகாப்பாக இருப்பது...
நீ நேசித்த உன் சாதியல்ல!
மக்களின் மனித நேயம் தான்!


கவிஞர்
கவி தென்றல்
ஆவடி, தமிழ் நாடு

இதைப் படித்த அன்பர்களே!
உங்கள் எண்ணங்களை இங்கே தெரிவியுங்கள்...

1 comment:

  1. புகைப்படமும் அதன் விளக்கமாக உள்ள
    மனித நேயத்தை விளக்கும் கவிதையும்
    மிக அருமை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete