welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011

 நடுத்தர வர்க்கம்


அக் கரையிலும் இல்லாமல்
இக் கரையிலும் இல்லாமல்
நடுக் கடலில் தத்தளிக்கும்
நடுத் தர வர்க்கம் நான்!

சைக்களில் செல்லலாம் என்றால்
மனம் சைக்கோவாக மறுக்கிறது!
காரில் வெளியே செல்ல மனம்
காகித விமானத்தில் பறக்கிறது!

லுங்கியும் கட்ட முடியவில்லை!
கோட், சூட்டும் போட இயலவில்லை!
பேண்ட், சட்டை போட்டுக் கொள்ள
போதுமான வசதியும் இல்லை!

குடிசையில் வசிக்க நினைத்தால்
குரங்கு மனம் கீழேப் பார்க்க மறுக்கிறது!
மாளிகையில் வசிக்க நினைத்தால்
மனம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது!

குடிசையுமில்லை, மாளிகையுமில்லை
குடக்கூலியில் வாழ்க்கை ஓடுது!
சொந்த வீடு கட்டலாம் என்றால்
சொற்ப வருமானத்தில் முடியவில்லை!

படைக்கும் போதே இறைவன்
பாகுபாடுடன் படைத்து விட்டான்!
ஏற்ற இறக்கம் இவ்வுலகில் மாற
ஏதாவது வழியுண்டா, சொல்லுங்களேன்!

                                                   கவிஞர்
                                            கவி தென்றல்
                                         ஆவடி, தமிழ்நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை
வாசித்தப் பின் உங்கள் எண்ணங்களை இங்கே
தூவி விடுங்கள் . நன்றி !

No comments:

Post a Comment