welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

சண்டையில்லை எங்களுக்குள்

சின்னப் பொண்ணு சிரிக்கிறா!
சேலைக் கட்டி மயக்குறா!
கண்ணாலே என்னைப் பாத்து
காதலிக்க அழைக்கிறா!

சின்னப் பையன் மொறைக்கிறான் - என்
சேலையைப் பார்த்து சிரிக்கிறான்!
முன்னலேப் போக விட்டு
பின்னே நின்னு அழைக்கிறான்!

தண்ணிக் குடத்தை இடுப்பில் வைத்து
தளுக்கி தளுக்கி நடக்குறா
தாகம் மிகுந்த எனக்கு கொஞ்சம்
தண்ணிக் கொடுக்க மறுக்குறா!

தாகம் என்று வந்தவனும் - என்னை
மோகத் தோடு பாக்குறான்!
பேதையாகிய எந்தன் மனதில்
போதை யேற்ற பாக்குறான்!

அறுவடை ஆகும் நேரத்திலே - என்
அருகில் வர பாக்குறான்!
குதிரில் நெல்லைக் கொட்டும்போது
பரிசம் போடா நிக்கிறான்!

பரிசம் போட போன என்னை
பாதை யிலே தடுக்குறா!
பரிச்சத்தோடே எந்தன் மார்பில்
பரந்த மாக சரிகிறாள்!

பொங்கல் வரும் தையிலே
பொழுது விடியும் காலையில
தங்க சரடு அவள் கழுத்து தாங்க - அவள்
தளிர்மேனியை என்மேனி தாங்க,
பொங்கி வரும் இன்பத்திலே!
சண்டை யில்லை எங்களுக்குள். 

                      கவிஞர்
                    கவி  தென்றல்
                   ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment