welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, December 7, 2010

           கூடி  வாழ்வோம்

காகம் இரையை கண்டுவிட்டால்
கத்திக்  கூப்பிடும் தன் இனத்தை !
கூட்டத்தில் ஒன்று இறந்திட்டால்
கூவியே சேர்த்திடும் பெரும் கூட்டத்தை !

எறும்பு உணவை பார்த்து விட்டால்
இழுத்துவரும் தன் கூட்டத்தை !
எறும்பு ஒன்று இறந்திட்டால்
ஏந்தி செல்லுமே சோகத்தால் !

பாதையில் ஒருவருக்கு விபத்தென்றால்
பயந்து ஒதுங்குகிறோம் நாமெல்லாம் !
அடுத்த வீட்டில் தீ யென்றால்
அலச்சியம் செய்கிறோம் நாமெல்லாம் !

குறைந்த அறிவு ஜீவனெல்லாம்
கூடி வாழ்வதை பார்த்தோமே !
ஆறறிவு மனிதன் நாமெல்லாம்
அவைகளை போல வாழ்வோமே !

                       கவிஞர்
                       கவி  தென்றல்
                       ஆவடி , தமிழ்நாடு .

Sunday, December 5, 2010

                     புண்

விரும்பியவள் சென்று விட்டாள்
வேறு ஒருவனுடன்!
வாழ வந்தவளுடன்
வாழ...
நான் பண்பட்டவன் அல்ல!
புண்பட்டவன்!

                 கவிஞர்
                 கவி  தென்றல்
                 ஆவடி, தமிழ் நாடு.
  வறுமை

கின்னஸ் புத்தகத்தில்
தேடி பார்த்தேன்!
உலக மக்களை
அதிகமாக...
வாட்டி வதைத்து
சாதனை புரியும்
வறுமையின் பெயரை!

                   கவிஞர்
                  கவி  தென்றல்
                ஆவடி, தமிழ் நாடு.
             பலி

கோயில்களில்
கோழி, ஆடு பலியிட தடை.
கசாப்புக் கடையில்...
தினம் தினம்
ஆயிரக்கணக்கில்
உயிர் பலி!

             கவிஞர்
             கவி  தென்றல்
             ஆவடி, தமிழ் நாடு.
 சிறைச்சாலை


நாளைய திருட்டுக்கு
திட்டம் வகுக்கும்
ரகசிய அறை!

         கவிஞர்
         கவி  தென்றல்
         ஆவடி, தமிழ் நாடு.

Thursday, December 2, 2010

நீதிமன்றம்


நீதி தேவதையின்
கையில்...
ரேஷன் கடை
தராசு!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

பிச்சைக்காரன்

சுவிஸ் வங்கியில்
கணக்கு வைத்திருக்கும்
யாசக பறவை!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

பள்ளிக்கூடம்

கல்விக்காக...
உழைப்பவரின் பணத்தை
உறிஞ்சும் அட்டை!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

முனிவர்

மண்ணாசை
பெண்ணாசை
பொருளாசை
விரும்பும்
வேடதாரி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

சாமியார்



மதங்களின்
பெயரைச் சொல்லி
மக்களை ஏமாற்றும்
சந்தர்ப்பவாதி !

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஆலயம்

பணக்காரர்களுக்கு
பக்கத்தில் தரிசனம்!
ஏழைக்கோ...
எட்டடி தூரத்தில்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

Wednesday, December 1, 2010

வக்கீல்



கத்தியே...
காசு சம்பாதிக்கும்
காரியவாதி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

வக்கீல்

உண்மையை
பொய்யாக்க
போராடும்
உண்மையான போராளி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

இறைவன்


தூணிலும் இருப்பான்!
துரும்பிலும் இருப்பான்!
வாங்கும்...
லஞ்சத்திலும் இருப்பான்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

நெசவாளர்

அடுத்தவர் மானம் காக்க
ஆடைகள் நெய்யும்
அரை நிர்வாணம்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

திருடன்



செய்யும் தொழிலை
திறமையாக செய்யும்
உழைப்பாளி!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

கோயில்

 
பணத்திற் கேற்ப
பக்தி வழங்கும்
வியாபார ஸ்தலம்!



கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

மழை

மேகமே...
நீ
சந்தோஷமாய்
இருக்கிறாய் போலும்!
சோகமாய்
இருந்திருந்தால்...
உன் கண்ணீரை
மழையாக
கொட்டியிருப்பாயே!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

புயல்

மோசக்காரியே...
புயலுக்குப்பின் அமைதி.
ஆனால்...
உன் திருமணத்திற்குப் பின்
என் வாழ்வில் புயல்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.


          மக்கள் ஆட்சி
         மக்களால்...
        மக்களுக்காக...
        மக்கள் பணத்தை
       சுரண்டுவதே...
       மக்கள் ஆட்சி!

                கவிஞர்
               கவி  தென்றல்
              ஆவடி, தமிழ் நாடு.

முத்தம்

பிரியமானவளே!
நீ வளர்க்கும்
நாய் குட்டியாக
நான் இருந்திருந்தால்...
தினமும் கிடைக்குமே
முத்தம்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

விதவை

                       விதவை

விதவை எதிர் வந்தால்
விளங்காது காரியம்!
மகனை வழியனுப்பி வைத்தாள்
விதவைத் தாய்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
     
    

நதிகள்

நாளைய உலகை
ஆளப் போவது...
இளைய சமுதாயம் அல்ல!
நதிகள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

கவிஞனின் கதறல்

என்னே கவிஞன்? இவனென
     நகைக்க செய் தோர் பலர்!
இவனல்லவா கவிஞனென
     வியக்க செய் தோர் பலர்!
இயற்கை கவிஞர் நானென
     இயம்பிய இவன்
இயற்றினான் கவிதைகளை
     இயல்பாக சில
தூற்றியதை தன்
     ஏற்றமாக எண்ணியவன்,
துடிப்புடன் பன்
     கவிதைகளை பண்ணியவன்
சோக நாதங்களை சுவையுடன்
     அதில் பண்ணியவன்,
முகத்தில் வழிந்தது
     அவனது அவமான கண்ணீர்.

பசியைப் போக்க கவிதை
     பண்ணுவோர் பலர்!
பணம் சேர்க்க பாடல்
     செய்வோர் பலர்!
புகழ் சேர்க்க செய்யுள்
     புனைவோர் பலர்! - என் போல்
இகழ் சேர்க்க கவிதை
     இயற்றுவோர் சிலர்
இயற்கை கவிஞனோ?
     செயற்கை கவிஞனோ?
யான் அறியேன்!
     பொய்யும் மெய்யும் கலந்து
புனைவதற்கும் யான் அறியேன்
     அகத்திரையில் அலைக் கழிக்கும்
அக்கற்பனையைக் கொண்டு
     புறத் திரையில் புகழ் மணக்கும்
புதுக் கவிதைகளைப் புனைந்திடுவேன் யான்!


                                                                               கவிஞர்
                                            கவி  தென்றல்
                                                                ஆவடி, தமிழ் நாடு.

ஒரே குலம்! ஒரே இனம்!

அந்தி சாயும் வேளையிலே - அந்த சோலையில்
ஆயிரம் குரல் கேட்குமே - அந்த வேலையில்
உவகையுடன் ஓடி சென்ற - எந்தன் காதிலே
உறுதியாக-ஒலித்ததுவே அந்த கானங்கள்!u

மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாருங்கள்!

ஆண்டவனின் படைப்பினிலே நாங்கள் ஓரினம்
அதுபோல நீங்களும் ஓரினமே!
காகம் முதல் கழுகுவரை பல இனங்கள்
காட்டில் வாழும் பறவைகளோ பல இனங்கள்!

எத்தனையோ இனங்களுண்டு எங்களிடத்தில்
ஏற்றத்தாழ்வு இல்லையே எங்களிடத்தில்!
ஒன்று முதல் நான்கறிவு எங்களுக்குண்டு
ஒற்றுமையும் எங்களது கூட்டத்திலுண்டு!

உயர்ந்தறிவாம் பகுத்தறிவு உங்களுக்குண்டு
உங்களிடத்தில் பலஜாதி பேதமும் உண்டு!
மானிடரே மானிடரே ஓடி வாருங்கள்!
மன உறுதியுடனே எல்லோரும் கூடி வாழுங்கள்!

பல இனங்கள், பல மொழிகள், பல ஜாதிகள்
பரந்து கிடக்கும் நம் பாரத நாட்டில்
ஒற்றுமையாய் வாழ்வோமென குரல் கொடுங்கள்!
ஒரே குலம் ஒரே இனமென சிந்து பாடுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

மாமியார்

மாமியாரை
கொடுமைப் படுத்தினாள்
மருமகள்!
நாளை...
தானும் ஒரு மாமியார்
என்பதை மறந்து!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.