welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, March 15, 2011

 பாதுகாப்பு

பாதுகாப்பு கடலில் நீந்தி
பார்வையாளர் உங்களை நாடி
உறவாட வந்துள்ள எனக்கு
உற்சாக வரவேற்பு தாரீர் !

உண்ண உணவு வேண்டும் !
உடுக்க உடை வேண்டும் !
உறங்க ஓர் இடமும் வேண்டும் !
உறுதுணையாய் பாதுகாப்பு வேண்டும் !

உண்ண உணவு எதற்கு ?
உயிர் வாழவும் , உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமா ?
கத்திரிக்காய் , கருவாடு உடம்புக்கு சூடு .
கண்டபடி உண்டாலோ வந்திடுமே கேடு !

வெண்டைக்காய் , வெண்ணை உடலுக்கு குளிர்ச்சி !
வெகுவாக உண்டாலோ மனதிற்கு தளர்ச்சி !
உண்ணும் உணவை யெல்லாம்
உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பதெல்லாம் எதற்கு ?
ஓடியாடி உழைத்திடும் நமக்கு
பாதுகாப்பு கிடைத்திடுமே அதற்கு !

உடுக்க உடை எதற்கு -நம்
உடலை மூடி அழகு படுத்தவா ?
பல்கிட்டும் பனிக் காற்றில்
பருத்தி ஆடை அணிவாயோ ?
கடுமையான கோடை வெய்யிலில்
கம்பளி ஆடைதான் அணிவாயோ ?

காலத்திற் கேற்ற ஆடையை -நாம்
கருத்தாய் தேர்ந் தெடுத்து
அணிந்துக் கொள்வது எதற்கு ?
அதுவும் நம் பாதுகாப்புக்கு !

உறங்க ஓர் இடம் வேண்டுமென்றால்
பரந்த உலகில் இடமா யில்லை?
வீதியிலே உறங்கலாமே -பின்
வீடு எதற்கு , சொத்து எதற்கு ?
குளிர் வெப்பம் கொள்ளைப் போன்ற
கொடுமையிலிருந்து நம்மை பாதுகாக்க !

  தாயின் கருவறையிலிருந்து -நம்
வாழ்நாள் கடைசி மட்டும்
ஒவ்வொரு அசைவிலும் ,
வெளிவிடும் மூச்சிலும்
ஒருங்கிணைந்து வருவதுதான் பாதுகாப்பு !


எங்கும் எதிலும் பாதுகாப்பு
என உணர்ந்தால் ஏதுமில்லை இழப்பு
என வாய்ப்பளித்த உங்களிடமிருந்தும் ,
பாசமிகு நண்பர்களிடமிருந்தும் ,
பாதுகாப்புடன் விடை பெறுகிறேன் வணக்கம் !

                                            கவிஞர்
                             கவி  தென்றல்
                                 ஆவடி , தமிழ்நாடு .





நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..


No comments:

Post a Comment