welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, March 1, 2011

இந்த காலமும் அந்த காலமும்

இந்த காலமும்                அந்த காலமும்

 




              







நிலாவைக் காட்டி
     சோறு ஊட்டியது
அந்த காலம் !
நிலாவில் மனிதன்
     கால் ஊன்றியது
இந்த காலம் !

அன்ன சத்திரங்கள்
     ஆயிரம் கட்டியது
அந்த காலம் !
அதை வாடகைக்கு விட்டு
     பணமாக்குவது
இந்தக்காலம் !

நீருக்காக ஏரி , குளம்
     வெட்டி வைத்தது
அந்தகாலம் !
அதை மூடி ஏழடுக்கு
     மாளிகை கட்டியது
இந்த காலம் !

நிழலுக்காக சாலையில்
     மரங்களை நட்டது
அந்த காலம் !
மரங்களை வெட்டி
     காசாக்குவது
இந்த காலம் !

பணமின்றி படிக்க
     பள்ளி சென்றது
அந்த காலம் !
பள்ளிப் படிப்பை
     பணமாக ஆக்குவது
இந்த காலம் !

கள்ளர்கள் நல்லவர்களாக
     மாறியது
அந்த காலம் !
நல்லவரும் வழிப்பறி
     கள்ளர் ஆனது
இந்த காலம் !

நள்ளிரவில் பெண் தனியே
     நடந்து சென்றது
அந்த காலம் !
பட்ட பகலில் பெண்
     வீட்டில் இருக்க பயப்படுவது
இந்த காலம் !

ஒரே கூட்டமாய்
     கூடி வாழ்ந்தது
அந்த காலம் !
சாதி , மதத்தால்
     சண்டையிட்டு பிரிந்தது
இந்த காலம் !

தாகத்தைத் தீர்க்க
     தண்ணீர் பந்தல் வைத்தது
அந்த காலம் !
தண்ணீரை விற்று
     காசாக்குவது
இந்த காலம் !

கேள்விக் கேட்டால்
     நீதி கிடைத்தது
அந்த காலம் !
கேள்விக் கேட்டாலே
     சிறையில் அடைப்பது
இந்த காலம் !

இந்த காலம் என்று
     ஒழியுமோ ?
அந்த காலம் என்று
     வருமோ ?

     
                          
                               கவிஞர்
                 கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு
.
    
அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப் பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கே தூவி விடுங்கள் . நன்றி

2 comments:

  1. சிறப்பான சிந்தனை... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை... பாராட்டுக்கள்.

    ReplyDelete