welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, June 9, 2011

    சீசாவில் தண்ணீர் நிரப்பும் போட்டி

பிளாஸ்டிக் வாளியில் தண்ணீருண்டு !
தண்ணீரை மொல்ல தளிர் கைகளுண்டு !
மின்னல் வேகத்தில் தண்ணீர் மொண்டு
கண்ணாடி சீசாவில் நிரப்ப குறைவான நேரமுண்டு !

வேகமாக ஊற்றினால் தண்ணீர்
வெளியே சிதறிவிடும் !
மெதுவாக நிரப்பினால் பரிசு
வேறு ஆளுக்கு மாறிவிடும் !

புரிந்து கொண்ட நீங்களும்
புதுமையாக செயல்பட்டால்
சிறந்த பரிசு உங்களுக்கு
விரைந்து வந்து சேர்ந்துவிடும் !

                                                       கவிஞர்
                                                  கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .









இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. புதுமையாக செயல்பட்டால்
    சிறந்த பரிசு உங்களுக்கு
    விரைந்து வந்து சேர்ந்துவிடும் !//

    அருமையான வாழ்வியல் தத்துவத்தை உண்ர்த்தும் அற்புதக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete