welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, June 10, 2011


      தென்றல்

காண இயலாத காற்றே !
கருணையில் இயற்கையின் ஊற்றே !
உயிரினங்கள் உயிர் வாழ
உறுதுணையாய் இருப்பதும் நீயே !

மேகங்களை குளிர செய்து
மழையைப் பெய்ய வைப்பதும் நீயே !
சாதி மத பேதமின்றி
சகலத்தையும் அரவணைப்பதும் நீயே !

கூலி வேலை செய்வோரின் குழந்தைகளை
தூலியில் தூங்க செய்வதும் நீயே !
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விசிறியாய் சுழல்வதும் நீயே !

பஞ்ச பூதங்களில் உன்னைத்தான்
தஞ்சம் கொள்கிறோம் நாங்கள் !
தென்றலை மிஞ்ச கூடியவர்  யாருண்டு ?
தெரிந்தால் கூறுங்கள் நீங்கள் !

                                                                             கவிஞர்
                                                               கவி  தென்றல்
                                                                   ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Thursday, June 9, 2011

    சீசாவில் தண்ணீர் நிரப்பும் போட்டி

பிளாஸ்டிக் வாளியில் தண்ணீருண்டு !
தண்ணீரை மொல்ல தளிர் கைகளுண்டு !
மின்னல் வேகத்தில் தண்ணீர் மொண்டு
கண்ணாடி சீசாவில் நிரப்ப குறைவான நேரமுண்டு !

வேகமாக ஊற்றினால் தண்ணீர்
வெளியே சிதறிவிடும் !
மெதுவாக நிரப்பினால் பரிசு
வேறு ஆளுக்கு மாறிவிடும் !

புரிந்து கொண்ட நீங்களும்
புதுமையாக செயல்பட்டால்
சிறந்த பரிசு உங்களுக்கு
விரைந்து வந்து சேர்ந்துவிடும் !

                                                       கவிஞர்
                                                  கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .









இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Monday, June 6, 2011





 












பந்தயத்தில் கலக்க வா...
பரிசுகளை வெல்லவா...


சின்ன சின்ன மழலைகள்
வண்ண வண்ண உடைகளில்
எண்ண மெல்லாம் நிறைவேற
எழுந்து ஒன்றாய் வாருங்கள்!

ஓடி யாடி விளையாடும்
உங்கள் போன்ற பிள்ளைகள்
ஓட்டப் பந்தயத்தில் ஓடினால்
உயர்ந்த பரிசை வெல்லலாம்!

தத்தித் தத்தி ஓடிவரும்
தவளைப் போல ஓடவே
சிரத்தைக் கொண்டு நீங்களும்
பரிசுப் பெற வாருங்கள்!

பாய்ந்து பாய்ந்து குதித்து
பன்னை வாயால் கடித்து
போட்டியில் நீ வென்றிட
பொலிவுடனே ஓடி வா!

ஓவியப் போட்டியில் நீயும்
ஒய்யார மாய் கலக்கலாம்
ஓகோ வென பாராட்டும்
ஓவியத்தையும் நீ வரையலாம்!

பாடி ஆடி ஓடி வா!
போட்டி இடத்துக்கு பறந்துவா!
பந்தயத்தில் கலக்க வா!
பரிசுகளை வெல்ல வா!


                                                                 கவிஞர்
                                                    கவி  தென்றல்
                                                       ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
        நினைவு

நினைவே என்முன் நில்லாதே!-பெண்ணே
நீயும் என்முன் நில்லாதே !
எனது உள்ளம் இங்கில்லை -நீ
ஏன் என என்னை கேளாதே !

அடர்ந்த சோலையின் நடுவினிலே
அவளும் நானும் சென்று வந்தோம் !
இனிமை நிறைந்த அவ்வேளையிலே
இன்பத்தை இருவரும் கண்டு வந்தோம் !

உள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்
ஒருத்திக்கு மட்டும் இடமுண்டு !
கள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு
கள்வரிடம் மட்டும் இடமுண்டு !

                                                                                கவிஞர்
                                                                  கவி  தென்றல்
                                                                      ஆவடி ,தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Thursday, June 2, 2011

 பணியிலே கவனக் குறைவு
முடிவிலே அங்கக் குறைவு



 










கையுறை, காலுறை,  மேலுறை - சாதனங்களை
கைக் கொண்டால் உனக்கில்லை உடற்குறை!
செய்முறை செயல்முறை பணிமுறை - தெரிந்து
செய்தால் வாழ்வில் வரும் நிறை!

தொழிலாளர்க்கு பல கவலை உண்டு - அது
தொழிற்சாலைக்குள் வரலாமா?
பிழைக்கும் இடத்தில் நமை மறந்தால்
இழக்க நேருமே நம் உயிரை!

பழுது சாதனங்களை கைக் கொண்டால் - நீ
பாழும் கிணற்றில் விழுந்திடுவாய்!
அழுது புரண்டு அழுதாலும் - உன்
இழந்த உறுப்பு இணைந்திடுமா?
உரிய சாதனம் கைக் கொண்டே - நம்
அரிய உடலைக் காத்திடுவோம்!


                                                                          கவிஞர்
                                                            கவி  தென்றல்
                                                                 ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!


   பாரம்

 

 












வயதான பெற்றோரை ,
பாரமாக எண்ணி
முதியோர் இல்லத்தில்
தள்ளிவிட வந்த
இளைஞனே...
இப்போதே உன் பெயரை
முன்பதிவு செய்துக் கொள் !
நாளை ...
உன் மகன்
உன்னை பாரமாக நினைக்கும் போது
உதவியாக இருக்கும் !

                                                   கவிஞர்
                                கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!